Connect with us

latest news

ஓவர் பரோட்டா உடம்புக்கு ஆகாது… கேரளாவில் பசு மாடுகளுக்கு வந்த சோதனை!

Published

on

கேரளாவில் அதிக அளவு பரோட்டா உட்கொண்ட 5 பசுமாடுகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொல்லம் வெளிநல்லூர் அருகே உள்ள வட்டப்பாறா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹெஸ்புல்லா. இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் மாட்டுப்பண்ணை நடத்தி வருகிறார். இவரது பண்ணையில் 30 பசுமாடுகள், 2 காளை மாடுகள் மற்றும் 2 எருமை மாடுகளை வளர்த்து வருகிறார்.

இவர் வழக்கமாகத் தனது மாட்டுப்பண்ணையில் உள்ள பசு மாடுகளுக்கு மட்டும் தினசரி உணவாக அவ்வப்போது பரோட்டா மற்றும் பலாப்பழம் ஆகியவற்றைக் கொடுப்பதுண்டு. இந்நிலையில், பசுமாடுகளுக்கு பரோட்டாவை காலை உணவாகக் கடந்த சனிக்கிழமை கொடுத்திருக்கிறார்.

பரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே பசு மாடுகள் வழக்கத்துக்கு மாறாக அதிக சத்தம் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன. மாலை 4 மணியளவில் பசு ஒன்று மயங்கி விழுந்து உயிரிழந்தது. ஞாயிறு காலை 8 மணியளவில் மேலும் 4 பசுக்கள் உயிரிழந்தன. இதுகுறித்து தகவலறிந்து மாநில கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் வந்து பசுக்களை பரிசோதித்தனர்.

பரோட்டாவை உட்கொண்ட 5 பசுக்கள் உயிரிழந்த நிலையில், மேலும் பல பசுக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாட்டுப்பண்ணையை நேரில் ஆய்வு செய்த கால்நடைத் துறை அமைச்சர் சிஞ்சு ராணி, பசுக்களுக்கு என்ன வகையான உணவுகளை அளிக்க வேண்டும் என்பது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும், விவசாயி ஹெஸ்புல்லாவுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இதை மட்டும் செஞ்சா போதும். ஒட்டுமொத்த நோய்களும் குணமாகும்..!

google news