Connect with us

Cricket

ஓப்பனிங்க விட பினிசிங் சூப்பர்!…ஐந்து பந்துகளிலேயே முடிந்து போன கிரிக்கெட் போட்டி!…

Published

on

T- 20

உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளது கிரிக்கெட் விளையாட்டு. இந்த வகையான விளையாட்டை பற்றி அறிந்திராத நாடுகள் கூட இதன் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறது. மிக நீண்ட வரலாற்றினை தனக்குள் கொண்டுள்ள கிரிக்கெட் போட்டிகள் ஐந்து நாட்கள் நடத்தப்படும் டெஸ்ட் போட்டி, ஐம்பது ஓவர்களை உள்ளடக்கிய ஒரு நாள் சர்வதேச போட்டி என இரண்டு விதமாக விளையாடப்பட்டு வந்தது.

இரு பரிணாமங்களில் வெகு ஆண்டுகளாக சர்வதேச போட்டிகள் விளையாடி வரப் பட்ட நிலையில், சமீபத்தில் போட்டியின் விறுவிறுப்பை அதிகரிக்கும் விதமான இருபது ஓவர் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள் போலவே இந்த வகையான போட்டியிலும் உலக சாம்பியன்களை அடையாளப்படுத்தும் விதமான உலகக் கோப்பை போட்டி தொடர்களும் நடத்தப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பலம் மிக்க தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது இந்திய அனி.

இந்நிலையில் 2026ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியும், மங்கோலியா அணியும் மோதின.

Mongolia Singapore

Mongolia Singapore

முதலில் பேட்டிங் செய்த மங்கோலியா அணி பத்து ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பதினோறு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சிங்கப்பூர் அணி முதல் ஓவரின் ஐந்தாவது பந்திலேயே வெற்றி பெற்று விட்டது.

ஐந்து பந்துகளில் அந்த அணி பதிமூன்று ரன்களைப் பெற்று வெற்றிக் கனியை ருசி பார்த்தது. மிகக் குறுகிய நேரத்திலேயே முடிவினை எட்டிய போட்டியாக இந்த போட்டி அமைந்தது. அதே போன்று இருபது ஓவர் போட்டிகளில் இரண்டாவது இன்னிங்ஸ் வெறும் ஐந்து பந்துகளில் முடிவடைந்த முதல் போட்டியாகவும் சிங்கப்பூர், மங்கோலியா அணிகளுக்கு இடையே நடந்த இந்தப் போட்டி மாறியுள்ளது.

google news

Cricket

நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்

Published

on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு பல முறை சாதகமான முடிவுகளை பெற்றுக் கொடுத்து இருக்கிறது. முன்னணி சுழற்பந்து வீச்சாளர் என்ற அடிப்படையிலும், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஆடம் ஜாம்பா இதுவரை ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடியதே இல்லை.

நேதன் லயன், மிட்செல் ஸ்வெப்சன், டாக் முர்ஃபி மற்றும் மேத்யூ குஹ்னெமேன் ஆகியோர் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் ஆஸ்தான மற்றும் இரண்டாம் கட்ட சுழற்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை உலகக் கோப்பை வெல்ல முக்கிய பங்கு வகித்த ஆடம் ஜம்பா ஒருமுறை கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைக்க அந்த அணி நினைத்ததே இல்லை.

நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடிய போதிலும், டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஏக்கம் இன்றும் தனக்கு இருப்பதாக ஆடம் ஜாம்பா தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது தனக்கு கடினமான காரியம் என்ற போதிலும், அதனை விளையாட ஆசை இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்களது டெஸ்ட் அணியில் இடம்பெற்று விளையாடினாலே பெரும் சாதனை என்ற நிலை உள்ளது.

அந்த வகையில், ஆடம் ஜாம்பா இதுவரை இந்த சாதனையை படைக்காதவராக இருக்கிறார். குறைந்த ஓவர்கள் கொண்ட கிரிக்கெட்டில் சாதனை படைத்த போதிலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடம் ஜாம்பா சாதனை படைக்கவில்லை. இது குறித்து ஆடம் ஜாம்பா சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார்.

“உண்மையில், என் வாழ்நாளில் இனிமேல் நான் ஆஷஸ் விளையாடவே முடியாது என்று தான் நினைக்கிறேன். எனக்கு இதில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறோம். அந்த வகையில், அவற்றில் விளையாட வேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது. இங்கிலாந்தில் விளையாடுவது, ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவது எனக்கு சாத்தியப்படும் விஷயமாக இருக்கும் என்று நினைக்கவில்லை,” என்று ஆடம் ஜாம்பா கூறியுள்ளார்.

google news
Continue Reading

Cricket

கவுதம் கம்பீரின் கோபம்.. தினேஷ் கார்த்திக் சொல்வது சரிதான்..

Published

on

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவரது தந்திரமிக்க ஆட்டம் மற்றும் கடுங்கோபம் என இரண்டிற்கும் சம அளவு பெயர் பெற்றவர். இந்திய அணிக்கு துவக்க வீரராக இருந்தது, ஐபிஎல் தொடரில் ஆலோசகராக இருந்தது என எந்த சூழலிலும் தனக்கு தவறு என தெரிந்தவற்றுக்கு கவுதம் கம்பீர் கோபத்தை வெளிப்படுத்த ஒருபோதும் தயங்கியதே இல்லை.

கவுதம் கம்பீரின் கோபம் உலக கிரிக்கெட்டில் பலருக்கும் பழகிப் போன விஷயம் தான். போட்டிகளின் போது வீரர்கள் கோபம் கொள்வது சமீபத்திய காலங்களில் சகஜமாக மாறி வருகிறது. கிரிக்கெட் மட்டுமின்றி விளையாட்டுத் துறையில் வீரர்கள் கோபத்தை வெளிப்படுத்துவது ரசிகர்களுக்கும் பழகிவிட்டது. இந்த நிலையில், கவுதம் கம்பீர் கோபம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.

“அவரது (கம்பீர்) கோபம் எப்போதும் வீரர்களை பாதுகாக்கவே வெளிப்படும். இதனை மற்ற வீரர்கள் அனைவருமே விரும்புவர். கோபம் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் கோபம் கொள்ள மாட்டார். தேவையான இடத்தில் கோபத்தை வெளிப்படுத்துவது, வார்த்தைகளை மிக கவனமாக பயன்படுத்துவது கம்பீரின் பாணி. இவ்வாறு செய்வது அவர் வீரர்களின் முழு திறமையை வெளிக்கொண்டு வர முடியும்.”

“ஏராளமான டி20 தொடர்களில் அவர் பங்கேற்றுள்ளார். ஆனால் இந்த டெஸ்ட் தொடர், ஒரு பயிற்சியாளராக அவருக்கு மிகவும் புதிதாக இருக்கும். அது அவரின் பின் மூளையில் விளையாடிக் கொண்டிருக்கும். கடினமான சூழல்களில் பல முறை வெற்றிகரமாக கடந்து வந்தவர்களில் ஒருவர் கம்பீர். போட்டியின் நாடியை புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர். ஒரு பயிற்சியாளராக இப்படி இருப்பது மிகவும் முக்கியம் ஆகும்.”

“பயிற்சியாளராக அவர் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறார். அந்த வகையில், அவர் எப்படி திட்டமிடுகிறார் என்பதை பார்க்க விறுவிறுப்பாக இருக்கும். அவர் அனைத்து தரப்பிலும் பங்காற்றக்கூடியவர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதுவரை அவரது இந்த பாணி மிகவும் சிறப்பாக பங்காற்றி இருக்கிறது,” என தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

google news
Continue Reading

Cricket

INDvsBAN டெஸ்ட்: எல்லாரும் பேசட்டும், எங்க Focus இது தான்.. ரோகித் சர்மா

Published

on

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் கணக்கிடப்படுகிறது.

மேலும், இந்திய சுற்றுப் பயணத்திற்கு முன் பாகிஸ்தானில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய வங்கதேசம் அணி, இரண்டிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இதே வேகத்துடன் இந்தியா வந்திருப்பது, இந்திய அணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடுவது என இந்த தொடர் பல காரணங்களால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடருக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பல விஷயங்கள் பற்றி பேசினார்.

“ஒவ்வொரு அணியும் இந்தியாவை வெல்ல வேண்டும் என்று நினைக்கின்றன. மேலும் அவர்களுக்கு அப்படி செய்வது பிடித்திருக்கிறது. அவர்கள் மகிழ்ச்சி கொள்ளட்டும். நாங்கள் பல்வேறு அணிகளுடன் அதிகளவு கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். நாங்கள் எங்களது போட்டியில் மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறோம்.”

“இங்கிலாந்து இங்கு வந்திருந்த போது, செய்தியாளர்கள் சந்திப்பில் நிறைய விஷயங்களை பேசினர், ஆனால் நாங்கள் அவை எதையும் கண்டுக்கொள்ளவில்லை. நாங்கள் எதிரணி பற்றி அதிகம் யோசிக்காமல், நல்ல கிரிக்கெட் விளையாடவே முயற்சித்தோம்,” என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.

google news
Continue Reading

Cricket

டோனியை அவுட் செய்தது வருத்தமா இருந்தது.. ஆர்சிபி வீரர் ஓபன் டாக்

Published

on

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிக் கட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையிலான போட்டியை சிஎஸ்கே மற்றும் எம்எஸ் டோனி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். வாழ்வா, சாவா நிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் இக்கட்டான சூழலில் எம்எஸ் டோனி அவுட் ஆனது ரசிகர்கள் மட்டுமின்றி அவரையும் மனதளவில் மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியது.

போட்டியின் கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து பந்துகளில் 11 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் எம்எஸ் டோனி போட்டியை ஃபினிஷ் செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், யாஷ் தயால் வேறு கிளைமேக்ஸ் கொடுத்து சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இக்கட்டான சூழ்நிலையில், கடைசி ஓவரை வீசிய யாஷ் தயால் எம்எஸ் டோனி விக்கெட்டை எடுத்தார்.

அடுத்த ஐபிஎல் சீசனில் டோனி விளையாடுவாரா? சிஎஸ்கே ஜெர்சியில் எம்எஸ் டோனி மீண்டும் விளையாடுவாரா என ஏகப்பட்ட கேள்விகளுடன் போட்டியை காண வந்த ரசிகர்கள் அவர் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியதை பார்த்து மனம் நொந்தனர். கிட்டத்தட்ட கிரிக்கெட்டில் கடைசி இன்னிங்ஸில் டோனி விளையாடுகிறாரோ என்ற ஏக்கத்துடன் வந்தவர்களுக்கும், நாம் அடுத்த சீசனில் விளையாடுவோமா என்ற கேள்வியுடன் களமிறங்கிய டோனிக்கும் அவுட் ஆனது வருத்ததை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், எம்எஸ் டோனி விக்கெட் எடுத்தது தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக யாஷ் தயால் தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த யாஷ் தயால் எம்எஸ் டோனியின் விக்கெட்டை எடுத்தது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

“அவரை அவுட் செய்ததும் நான் மோசமாக உணர்ந்தேன். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று எனக்கு தெரியாது, ஆனால் அவர் களத்தில் இருந்து வெளியேறும் போது இருந்த விரக்தி, அவர் மீண்டும் விளையாடுவாரா, இல்லையா என்பதை உணர்த்தியது. அவரை மீண்டும் களத்தில் பார்ப்போமா? என என் மனதில் நிறைய விஷயங்கள் ஓடிக் கொண்டே இருந்தது. பிறகு பெருமூச்சு விட்டேன், சற்று நிம்மதி கிடைத்தது,” என்று யாஷ் தயால் தெரிவித்தார்.

google news
Continue Reading

Cricket

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… ஜெய்ஸ்வாலுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்.. முதல் இந்தியர் ஆகலாம்

Published

on

இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புதிய சாதனை படைக்க உள்ளார். இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையே நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 132 ரன்களை அடித்தால் புதிய சாதனை படைக்கலாம். தற்போதைய 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஜெய்ஸ்வால் இதுவரை 1028 ரன்களை அடித்துள்ளார்.

அதன்படி இவர் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியின் போது 132 ரன்களை மட்டும் அடித்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒற்றை எடிஷனில் அதிக ரன்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற முடியும்.

முன்னதாக 2019-21 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அஜிங்கியா ரஹானே 1159 ரன்களை அடித்து, ஒரே தொடரில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதுதவிர ஒற்றை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 1000 ரன்களுக்கும் மேல் அடித்த மூன்று இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் ஒருவர் ஆவார். இவர் தவிர ரஹானே மற்றும் ரோகித் சர்மா 1000 ரன்களை அடித்துள்ளனர்.

தற்போது 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன்களை அடித்துள்ள வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் மற்றும் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் ஆகியோர் 1028 ரன்களை அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

ஜெய்ஸ்வால் வங்கதேசம் அணிக்கு எதிரான தொடரில் 371 ரன்களை அடிக்கும் பட்சத்தில் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்-ஐ பின்னுக்குத் தள்ளி முதலிடம் பெற முடியும்.

 

google news
Continue Reading

Trending