கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்தில் ஒருவருக்கு தெரியவரும்போது அது கொலையில் முடிவது என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கரியபெருமாள்வலை என்கிற கிராமத்தில் வசித்து வந்த அலமேலு (56) திடீரென காணாமல் போனார். எனவே, அவரின் இளைய மகன் சேட்டு அவரை தேடி வந்தார்.
அப்போது அருகிலிருந்து காட்டுப்பகுதியில் ஒரு பெண்ணின் உடல் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அங்கு போய் பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது தனது தாய் அலமேலு என்பதை கண்டுகொண்ட சேட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து அலமேலுவின் மருமகள் பவித்ராவே கொலையாளி என்பது தெரிய வந்திருக்கிறது.
அலமேலுவின் மூத்த மகன் ஏழுமலையை பவித்ரா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தையும் இருக்கிறது. ஏழுமலை கோவையில் வேலை செய்து வந்தார். அபோதுதான் பக்கத்து வீட்டில் வசிக்கும் கல்லூரி மாணவர் மணிகண்டன் என்பவருடன் பவித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த விவகாரம் அலமேலுவுக்கு தெரியவர பவித்ராவை கண்டித்திருக்கிறார். ஆனாலும் அவர் திருந்தவில்லை.
அலமேலுவுக்கும், பவித்ராவுக்கும் ஆடு மேய்ப்பதுதான் தொழில். கடந்த 23ம் தேதி ஆடு மேய்க்கபோன பவித்ரா மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை. எனவே, அலமேலு அங்கே போய் பார்த்தபோது பவித்ராவும், மணிகண்டனும் உல்லாசம் அனுபவித்துக்கொண்டிருப்பதை நேரில் பார்த்துவிட்டு அவர்களை கடுமையாக எச்சரித்திருக்கிறார். அதில், கோபமடைந்த மணிகண்டன் அலமேலுவின் கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறார்.
உடலை எரித்துவிட்டால் அடையாளம் தெரியாது என கணக்குப்போட்ட இருவரும் பெட்ரோல் ஊற்றி அலமேலுவின் உடலின் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். ஆனால், அலமேலுவின் உடல் பாதி மட்டுமே எரிந்திருக்கிறது. இப்போது பவித்ராவையும், மணிகண்டனையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…