கடந்த 19ம் தேதி கள்ளக்குறிச்சி கருணாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பலரும் அப்பகுதியில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்திருக்கிறார்கள். அதில், எல்லோருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதில், 3 பேர் இறந்து போனார்கள். அவர்களின் இறுதிச்சடங்களில் கலந்து கொண்ட பலரும் அதே கள்ளச்சாராயத்தை வாங்கி குடிக்க பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
வாந்தி, மயக்கம், வயிற்று வலி உள்ளிட்ட பல காரணங்களால் அவதிப்பட்டு கள்ளக்குறிச்சி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ஒவ்வொருவராக இறந்து போனார்கள். மருத்துவமனையில் போதிய இடம் இல்லாதால் அதில் சிலர் சேலம், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகளுக்கும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து பலி என்ணிக்கை அதிகரித்துகொண்டே போனது. 19ம் தேதி 17 பேரும், 20ம் தேதி 24 பேரும், 21ம் தேதி 9 பேரும் என 50 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் கர்ணாபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திராவிலிருந்து கெட்டுப்போன மெத்தனாலை வாங்கி புதுச்சேரிக்கு கொண்டு வந்து அங்கிருந்து கல்வராயன் மலைக்கு கொண்டு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சி கர்ணாபுரம் பகுதியில் விற்பனை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களையும், மெத்தனால் வாங்கி வந்தவரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். தற்போது பலி எண்ணிக்கை 7 ஆகி மொத்த எண்ணிக்கை 57ஆக உயர்ந்திருக்கிறது.
இப்போது அனைத்து மருத்துவமனைகளிலும் சேர்த்து 148 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 20 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…