Connect with us

Finance

ரோடு ஷோ மட்டும் தானா?…ரயிலெல்லாம் ஓடாதா?…அடுக்கடுக்காக கேள்விகளை கேட்ட தயாநிதி மாறன்…

Published

on

நேற்று தாக்கலான பட்ஜெட்டின் மீது எதிர்கட்சியான காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் விமர்சனங்களை சொல்லி வருகிறது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எல்லாம் விஷயம் இல்லாத பட்ஜெட் இது என வசை பாடி வந்து கொண்டிருக்கிறது. ராகுல் காந்தி, கார்கே துவங்கி தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் உட்பட பலரும் பட்ஜெட் குறித்த தங்களது எதிர்ப்பினை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டது. தமிழக எம்.பி.தயாநிதி மாறன் பட்ஜெட் குறித்த பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். தமிழகத்திற்கு இந்த பட்ஜெட்டின் மூலம் எந்த விதமான பயனும் இல்லை என்ற நோக்கிலேயே பேசினார் தயாநிதி மாறன். தாம்பரம் – செங்கல்பட்டு உயர்மட்ட சாலைக்கு ஒப்புதல் தரப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

அதே போல ரஷ்யாவிலிருந்து பாதி விலைக்கு கச்சா எண்ணெயை வாங்கிய போது மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை இதுவரை குறைக்கவில்லை என்றார். கோயம்பத்தூரில் ரோட் ஷோ நடத்திய மோடி, அதே கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் தரவில்லை என சுட்டிகாட்டினார். பிரதமர் மோடி வாக்களித்த மக்களுக்காக பாடுபடவில்லை, கூட்டணிக் கட்சிகளின் நலனுக்காகவே பாடுபட்டுவருகிறார் என தனது குற்றச்சாட்டினை அழுத்தமாகச் சொன்னார் தயாநிதி மாறன்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *