இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளங்குபவர் மகேந்திர சிங் தோனி. கேப்டன் கூல் என்று இவரை செல்லமாக அழைப்பதுண்டு. தோனி தலைமையிலான இந்திய அணி வெல்லாத கோப்பைகளே கிடையாது. மேலும் இதைத் தவிர சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக குறைந்த சீசன்கள் விளையாடி ஐந்து முறை கோப்பையை வென்று சாதனையும் படைத்துள்ளார். இப்படி பல வெற்றிகளுக்கு சொந்தக் காரராக விளங்கும் இவரை பற்றி தற்போது சர்ச்சை கூறிய கருத்துக்களை பரப்பி வருகிறார். முன்னாள் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங்கின் தந்தையான யோகராஜ் சிங்.
யுவராஜ் சிங் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று வருகிறார். இருந்தபோதிலும் தோனியை பற்றி சர்ச்சை கருத்துக்களை கூறி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது இவரின் தந்தையான யோகராஜ் சிங்கும் தோனி மீது காட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். தோனியை பற்றி கூறியது மட்டும் இல்லாமல் இதில் விராட் கோலியும் இழுத்து விட்டுள்ளார் யோகராஜ் சிங் . 2019 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வெல்லாமல் போனதற்கு காரணமே தோனி தான் என்று பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது இணையதளத்தில் பலருக்கும் அதிர்ச்சி அளித்து வருகிறது. மேலும் இது ரசிகர்களிடையே விவாத பொருளாகவும் மாறியுள்ளது.
சமீபத்தில் யோகராஜ் சிங் கூறியதாவது 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி செமி பைனலில் வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் தோனி என்று குறிப்பிட்டுள்ளார். அந்த போட்டியில் ஒரு முனையில் ரவீந்திர ஜடேஜாவும் மறுமுனையில் தோனியும் ஆடிக் கொண்டிருந்தனர். ஜடேஜா ஆக்ரோஷமாக விளையாடி பந்தை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக அடித்து விளாசினார். மறுமுனையில் தோனி நிதானமான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தினார். தோனி மட்டும் அன்று அவருடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தால் 48வது ஓவர்லே அந்தப் போட்டியை வென்றிருக்க முடியும். என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, தோனி ஒரு முனையில் நின்று ஜடஜாவை நீ அடி என்று சொன்னவுடன் அவரும் சிக்ஸர் மாழையை பொழிய தொடங்கி பின்னர் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியாவும் அதேபோன்று அடித்து ஆடினார். பின்னர் அவருடைய விக்கெட்டும் எடுக்கப்பட்டது. மறுமுனையில் சப்போர்ட் கிடைக்காததாலும் தோனி அவருடைய ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் நிதானமாக ஆடியதாலும் அந்த மேட்ச் தோல்வியை கண்டது.
மேலும் இதற்கு காரணமாக அவர் கூறுவது தோனி விராட் கோலி தலைமையில் உலகக் கோப்பை வெல்வது அவருக்குப் பிடிக்கவில்லை அதனால்தான் அன்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை தோல்வியின் பாதைக்கு அழைத்துச் சென்றார். விராட் கோலி அவர் ஒரு குழந்தை என்றும் அவரை ஏமாற்றி தப்பான நுணுக்கங்களை பயன்படுத்தி இந்திய அணி தோற்கடித்துள்ளார். என்று தோனியின் மீது காரசாரமாக சாடியுள்ளார் யோகராஜ் சிங். மேலும் தோனியின் இடத்தில் சௌரவ் கங்குலி அல்லது பிஷன் சிங் பேடி இவர்கள் யாராவது ஒருவர் அந்த இடத்தில் இருந்திருந்தால் கேப்டனாக இருந்திருந்தால் தோனி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்திருக்க மாட்டார். இவ்வாறு தோனியின் மீது பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் யுவராஜ் சிங் தந்தையான யோகராஜ் சிங்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…