சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் 11 ஆயிரம் வைரத்தை வைத்து ரத்தன் டாடா உருவத்தை வடிவமைத்துள்ளார்.
பிரபல டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் தொழிலதிபருமான ரத்தன் டாடா வயது முதிர்வு காரணமாக கடந்த வாரம் புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். இவருக்கு வயது 86. இவரது உடல் கடந்த வாரம் வியாழக்கிழமை அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தார்.
உயிரிழந்த ரத்தன் டாடா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மும்பையில் வைக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இருக்கும் மும்பையில் உள்ள வொர்லி மயானத்திற்கு எடுத்துவரப்பட்டது. பின்னர் அவரின் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி இருந்தார்கள்.
பிறகு அரசு மரியாதையுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ரத்தன் டாடா மறைவுக்கு பல தலைவர்கள், அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் மறைந்த ரத்தன் டாட்டாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி 11 ஆயிரம் வைரக்கற்களை வைத்து அவரின் உருவத்தை வடிவமைத்து அசத்தியிருக்கின்றார். இது தொடர்பான வீடியோ ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…