Connect with us

Cricket

INDvsBAN டெஸ்ட்: இந்தியாவில் இந்தியாவை ஜெயிக்கிறது ஈசி கிடையாது.. தினேஷ் கார்த்திக்

Published

on

இந்திய கிரிக்கெட் அணி கிட்டத்தட்ட 43 நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் களத்தில் இறங்க ஆயத்தமாகிறது. இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த வாரம் துவங்குகிறது. செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கும் முதல் போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

வங்கதேசம் அணி இம்மாத துவக்கத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்று அசத்தியது. பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய கையோடு இந்தியா வரும் வங்கதேசம் அணி டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேசம் அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக வெற்றி பெற்று அசத்தியது.

பலம் வாய்ந்த அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய கையோடு இந்தியா வரும் வங்கதேசம் அணியை எளிதில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்து இருந்தனர். இருவரின் கருத்து இந்திய அணிக்கு எச்சரிக்கை மணியாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இருவரின் கருத்துக்கு முரணாக கருத்து தெரிவித்துள்ளார்.

“தனிப்பட்ட முறையில் வங்கதேசம் அணி இந்தியாவுக்கு கடினமான நேரத்தை வழங்கிவிட முடியாது என்றே நான் நினைக்கிறேன். இந்தியாவை இந்தியாவில் வீழ்த்துவது மிகப்பெரிய விஷயம், வங்கதேசம் பாகிஸ்தானில் சிறப்பாகவே விளையாடினார்கள். எனினும், அவர்கள் இந்திய அணிக்கு அதிகம் தொல்லை கொடுக்க முடியும் என்று நான் நம்பவில்லை,” என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

google news