latest news
AI தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்…? இத்தோட நிறுத்திக்கோங்க… தேமுதிக சார்பில் வெளியான முக்கிய அறிவிப்பு…
தமிழ் திரையுலகையை சேர்ந்த அனைவருக்கும் தேமுதிக சார்பாக ஒரு முக்கிய அறிவிப்பை பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டு இருக்கின்றார்.
தமிழ் மக்களால் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்தவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவில் மட்டுமில்லாமல் அரசியல் தலைவராகவும் மிகப்பெரிய புகழை பெற்றவர். தேமுதிக என்ற கட்சியின் தலைவராக இருந்து வந்த இவர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். பின்னர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதைத் தொடர்ந்து பலரும் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக தேமுதிக தலைமை கழகம் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது. அதில் “தமிழ் திரையுலகை சேர்ந்த அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். விஜயகாந்த் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகின்றது.
எனவே இது போன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகிறது. எங்களிடம் முன் அனுமதி இல்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்னரே இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எங்களிடம் அனுமதி பெறவில்லை. எனவே அனுமதி இல்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வீடியோ வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.