Finance
தொடரும் விலை குறைவு…ஆபரணப் பிரியர்கள் திடீர் உற்சாகம்!.
சென்னையில் விற்கப்பட்டு வரும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலையில் இந்த மாதத் துவக்கத்திலிருதே ஏற்ற, இறக்கங்கள் இருந்தே காணப்படுகிறது. உயர்வை நோக்கி செல்லும் இவைகளின் விலை திடீரென வீழத்துவங்கும். இப்படி நிலை இல்லாதத் தன்மையோடு தான் இந்த மாதம் நகர்ந்து வருகிறது.
நேற்றைப் போலவே இன்றும் சென்னையில் விற்கப்பட்டு வரும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ஆறாயிரத்து என்னூற்றி அறுபத்தி ஐந்து ரூபாய்க்கு (ரூ.6865/-) விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று கிராமிற்கு நேற்றைப் போலவே இன்றும் பதினைந்து ரூபாய் (ரூ.15/-) குறைந்து.
நேற்று முன் தினத்தை விட சவரனுக்கு நூற்றி இருபது ரூபாய் குறைந்து விற்பனையானதைப் போலவே இன்றும் சவரன் ஒன்றிற்கு நூற்றி இருபது ரூபாய் (ரூ.120/-) குறைந்துள்ளது.
ஐம்பத்தி நான்காயிரத்து தொல்லாயிரத்து இருபது ரூபாய்க்கு (ரூ. 54,920/-) நேற்று விற்பனையாகி வந்த தங்கம் இன்று ஐம்பத்தி நான் காயிரத்து என்னூறு ரூபாய்க்கு (ரூ.54,800/-) விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை குறைவைப் போலவே தான் வெள்ளியின் விற்பனை விலையிலும் மாற்றம் காணப்படுகிறது.
நேற்று தொன்னூற்றி ஏழு (ரூ.97/-) ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிராம் வெள்ளி இன்று ஒரு ரூபாய் குறைந்து தொன்னூற்றி ஆறு ரூபாய்க்கு (ரூ.96/-) விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று தொன்னூற்றி ஆறாயிரம் ரூபாயாக (ரூ.96,000/-) உள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களாக சரிவை சந்தித்து வரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையால் ஆபரணப் பிரியர்களுக்கு திடீர் உற்சாகம் பிறந்துள்ளது.