Connect with us

latest news

என் சர்வீஸ்ல இப்படி நடந்ததில்ல…கொஞ்சமா குடிச்சேன், அவ்ளோ தான்…அதிர வைத்த பஸ் டிரைவர்…

Published

on

சாலை விதிகளை கடைபிடித்து தங்களது பயணத்தை பாதுகாப்பனதாக ஆக்கிக்கொள்ள அரசு சார்பிலும், காவல் துறை சார்பிலும் பல விதமான விழிப்புணர்வுகளை வழங்கப் பட்டு வருகின்றது. விதிகளை மீறி சாலைகளில் வாகனங்களை இயக்குபவர்களுக்கு ஃபைன் போட்டும், சிலரின் வாகனங்களை சீஸ் செய்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதிலும் குடி போதையில் வாகனங்களை இயக்குபவர்களின் மீது அதிக கவனம் காட்டிவருகிறது அரசும், காவல் துறையும். மது அருந்தி விட்டு பயணங்கள் மேற்கொள்ளும் இவர்களது ஒழுக்கமற்ற செயல்களினால் பிறரது உயிருக்கும், உடைமைகளுக்கு ஆபத்தினை விளைவித்து விடுகிறார்கள்.

இது போன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் குடித்து விட்டு பேரூந்து இயக்கிய டிரைவருக்கு பஸ் பயணிகளும், பொது மக்களும் நன்றாக புத்திமதி சொல்லி அனுப்பியுள்ளனர்.

file picture don't drink and drive

file picture don’t drink and drive

ஓ.எம்.ஆரில் குடி போதையில் இருந்த நிலையில் பஸ்ஸை இயக்கிய டிரைவர், அதனை விபத்துக்குள்ளாக்கியுள்ளர். விபத்தினையும் செய்து விட்டு நடந்தது ஏதும் தெரியாத குழந்தை போல அதே பஸ்சுக்குள் அமர்ந்திருக்கிறார். பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளும் பொது மக்களும் பஸ் டிரைவருக்கு டோஸ் விட்டனர்.

அப்போது தானே சென்று லேசாக மது குடித்து விட்டு வந்து, அதன் பின்னர் பஸ்ஸை இயக்கியதாகவும், தனது பதினான்கு ஆண்டு கால எக்ஸ்பீரியன்சில் இதுவே முதல் விபத்து என்றும், இது வரை தான் விபத்தை சந்தித்ததே இல்லை என்றும் டிரைவர் பேசும் காட்சி வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *