கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணிக்கு கிடைத்த விக்கெட் கீப்பர்களில், முக்கியமான இடத்தை பிடித்தவர் மகேந்திர சிங் தோனி. விக்கெட் கீப்பராக இவர் செய்த சாதனைகளை விட கேப்டனாக, அணி விரர்களில் ஒருவராக இந்திய அணிக்கு இவர் வழங்கிய பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.
எத்தனை பெரிய இமாலய இலக்கை எதிரணி நிர்ணயித்திருந்தாலும், தோனி களத்தில் நின்றால் அது சாத்தியம் என்ற மனநிலையை போட்டி நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் ரசிகர்கள் மனதில் நம்பிக்கையாக எழச் செய்தவர் இவர்.
கபில்தேவ் தலைமையில் 1983ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி ஐம்பது ஓவர் ஒரு நாள் சர்வதேச உலக்கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் இவர்.
இருபது ஓவர் உலக் கோப்பையை இந்திய அணி முதன் முதலாக வெல்ல காரணமான கேப்டனும் இவரே தான் என சொல்லப்பட்டு வருகிறது இவரது ரசிகர்களால்.
சர்வதேச கிரிக்கெட் விளையாட்டின் மூன்று வடிவங்களான ஐந்து நாள் டெஸ்ட், ஐம்பது ஓவர் ஒரு நாள், இருபது ஓவர் போட்டிகள் என அனைத்திலும் எண்னிலடங்கா சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழும் தோனி, உள்ளூர் போட்டியில் செய்த சாதனையை சமன் செய்துள்ளார் இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய துரூவ் ஜூரெல்.
துலீப் கோப்பை போட்டியில் விளையாடி வரும் துரூவ் ஜூரெல் ஒரே இன்னிங்ஸில் ஏழு கேட்சுகளை பிடித்து, தோனியின் சாதனையை சமன் செய்திருந்தார்.
2004 – 2005ம் ஆண்டு தோனி ஒரே இன்னிங்ஸில் ஏழு கேட்சுகளை பிடித்து சாதனை படைத்திருந்தார். 2024 – 25ம் ஆண்டிற்கான துலீப் கோப்பை போட்டியில் துரூவ் ஜுரெல் ஒரே இன்னிங்ஸில் ஏழு கேட்சுகளை பிடித்து தோனியில் சாதனையை சமன் செய்தார்.
சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணிக்கு விக்கெட் கீப்பராக களமிறக்கப்பட்ட ஜுரெல் உள்ளூர் போட்டியில் ஜாம்பவான் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளதை அடுத்து இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழத்துவங்கியுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இப்போது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…