Connect with us

latest news

மின்னணு வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்யலாம்!.. மத்திய அமைச்சருக்கு எலன் மாஸ்க் பதில்!..

Published

on

elan mask

10 வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்தியாவில் எந்த தேர்தல் என்றாலும் வாக்கு சீட்டுகள் மூலம்தான் நடைபெற்றது. இதில், எந்த மோசடியும் செய்ய முடியாது. எனவே, இது நம்ப தகுந்ததாக இருந்தது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபின் வாக்கு சீட்டுக்கு பதில் EVM என சொல்லப்படும் மின்னணு வாக்கு இயந்திரத்தை கொண்டு வந்தது.

வாக்கு இயந்திரம் மீது மக்களுக்கே நம்பிக்கை இல்லை என்கிற பொதுவான கருத்து நிலவுகிறது. எனவே, எதிர்கட்சியான காங்கிரஸ் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. ஆனால், இது பாதுகாப்பானது. இதில் எந்த முறைகேடும் இல்லை என தேர்தல் கமிஷன் சொன்னது. எனவே, உச்சநீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

எனவே, கடந்த 10 வருடங்களாக இந்தியாவில் எல்லா தேர்தல்களும் ஈ.வி.எம் என சொல்லப்படும் மின்னணு வாக்கு இயந்திரம் மூலம் நடந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தல் நடந்தபோது பல இடங்களில் காங்கிரசுக்கு ஓட்டு போட்டால் பாஜக-வுக்கு விழுவதாக புகார் எழுந்தது. ஆனாலும், தேர்தல் நடந்து முடிந்தது.

இந்நிலையில், டிவிட்டரின் நிறுவன எலன் மாஸ்க் டிவிட்டரில் ‘ஈ.வி.எம் மனிதனாலும், ஏ.ஐ. தொழில்நுட்பத்தாலும் ஊடுறுவக் கூடியவை. அவற்றை ஒழிக்க வேண்டும்’ என பதிவிட்டிருந்தார். ஆனால், இதை மறுத்த மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் ‘இந்திய ஏவிஎம் களில் வெளி இணைப்புகள் இல்லை என்பதால் அது பாதுகாப்பானவை’ என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள எலன் மாஸ்க் ‘எதை வேண்டுமானாலு ஹேக் செய்யலாம்’ என பதிவிட்டிருக்கிறார். எலன் மாஸ்க்கின் இந்த கருத்து சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *