latest news
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு… எவ்வளவு தெரியுமா…? முழு விவரம் இதோ…!
தமிழகத்தில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டு என அனைத்து வகையான மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதில் அவர்கள் தெரிவித்திருந்ததாவது: தமிழகத்தில் 4.38% அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஜீரோ முதல் 400 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து 4 ரூபாய் 80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
401 முதல் 500 யூனிட் வரை உள்ள பயன்பாட்டிற்கு 6 ரூபாய் 15 காசுகளிலிருந்து, 6 ரூபாய் 45 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. 500 முதல் 600 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 8 ரூபாய் 15 காசுகளிலிருந்து 8 ரூபாய் 55 காசுகளாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கின்றது. மேலும் 600 முதல் 800 வரை உள்ள பயன்பாட்டிற்கு 9 ரூபாய் 20 காசுகளிலிருந்து, 9 ரூபாய் 65 காசுகளாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு இனி 11 காசுகள் வசூல் செய்யப்படும் என்று மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணமும் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த மின்கட்டண உயர்வு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், மின்கட்டணம் உயர்த்தப்பட்ட போதும் ஒரு கோடி மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கம் அளித்து இருக்கின்றது.
இரு மாதங்களுக்கு 20 முதல் 50 ரூபாய் வரை நிலை கட்டணம் செலுத்துவதிலிருந்து வீட்டு மின் நுகர்வோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிபாட்டுத்தலங்கள், தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்து இருக்கின்றது.