ஜோ ரூட் தனது ஆறாவது இரட்டை சதத்தை டெஸ்ட் போட்டிகளில் அடித்து இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். இருபதாயிரம் ரன்களை டெஸ்ட் போட்டிகளில் கடந்த இங்கிலாந்தின் முதல் வீரர் என்ற பெருமையையும் அடைந்தார்.
இப்படி சாதனைகள் ஒரு புறம் நிகழ்த்தப்பட்டு வந்தாலும், பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இன்னிங்க்ஸ் வெற்றியை பெற்றது இங்கிலாந்து. டாஸின் படி முதலாவதாக பேட்டிங் செய்தது பாகிஸ்தான் அணி. மூன்று டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் மோதுகிறது இந்த இரண்டு அணிகளும்.
முதல் போட்டி முல்தான் மைதானத்தில் வைத்து நடத்தப்பட்டது. முதல் இன்னிங்ஸில் நன்றாக விளையாடி ஐனூற்றி ஐம்பத்தி ஆறு ரன்களை குவித்தது பாகிஸ்தான் அணி.அ பாகிஸ்தானின் மூன்று பேட்ஸ்மேன்கள் சதமடித்திருந்தனர். பத்து விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் இழந்த நிலையில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடியது.
ஏழு விக்கெட்டுகளை இழந்து என்னூற்றி இருபத்தி மூன்று ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது இங்கிலாந்து. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹேரி புரூக் முன்னூற்றி பதினேழு ரன்களை குவித்தார். முதல் இன்னிங்ஸில் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடத்துவங்கியது பாகிஸ்தான்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ நான்காம் நாள் ஆட்டத்தின் முடிவில் தடுமாறியிருந்தது பாகிஸ்தான். இன்னிங்ஸ் தோல்வியையாவது தவிர்ப்பார்களா? என அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர்களது எதிர்பார்ப்பின் மீது மண்ணைத்தூவியது பாகிஸ்தான் அணி.
இருனூற்றி இருபது ரன் களை எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது சொந்த மண்ணில் வைத்தே இங்கிலாந்திடமிருந்து இன்னிங்ஸ் தோல்வியை பரிசாக வாங்கிக் கொண்டது பாகிஸ்தான். இங்கிலாந்து அணியின் இடது கை பந்து வீச்சாளர் ஜாக் லீச் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஒரு இன்னிங்ஸ் மற்றும் நாற்பத்தி ஏழு ரன்களில் தோல்வியைத் தழுவியதுன் பாகிஸ்தான். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…