Connect with us

latest news

வீட்டை காலி செய்யுங்கள்… நாடு திரும்பிய மனு பாக்கர் பயிற்சியாளருக்கு நடந்த சோகம்!

Published

on

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய நாட்டிற்கு முதல் இரண்டு பதக்கங்களை வாங்கி கொடுத்த மனுபாக்கரின் பயிற்சியாளருக்கு நடந்த சோகம் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பாரிஸ் ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை மனு பாக்கர் வாங்கி கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து கலப்பு இரட்டையர் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் களமிறங்கிய இந்த இணை அடுத்த பதக்கத்தினை பெற்று தந்தது. இவ்விருவருக்கும் தேசிய பயிற்சியாளராக இருந்தது சமரேஜ் ஜங் தான். 

இந்நிலையில் போட்டிகள் எல்லாம் முடிவடைந்த பின்னர் அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் டெல்லி திரும்பினார். ஏற்கனவே பல மாதங்களாக அவருக்கு சம்பளம் இல்லை. மனு பாக்கருக்காக மட்டுமே பயிற்சியாளராக இருப்பதாக பேசி இருப்பார். இந்நிலையில் அவரின் வீடு இரண்டு நாட்களுக்குள் இடிக்கப்படுவதாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டெல்லியில் அவர் வசிக்கும் வீடு பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமானது என்பதால் உடனே இடிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த நோட்டீஸை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் வழங்கி இருக்கிறது. அப்பகுதியினர் மொத்தத்துக்குமே இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாம்.

இதுகுறித்து பேசிய சமரேஜ் ஜங் எனது குடும்பம் இங்குதான் 75 வருடங்களாக வசித்து வருகிறது. சட்ட விரோதமானது என்றால் இதில் மக்களை குடியமர்த்த எப்படி அவர்கள் ஒப்புக்கொண்டனர் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. என் வீட்டு வரியை சரியான நேரத்தில் செலுத்தி வருகிறேன். 

இது அரசுக்கு சொந்தமான இடம் என்றால் நான் வெளியேறி விடுவேன். ஆனால் இரண்டு நாட்களில் வெளியேற வேண்டும் என நோட்டீஸ் கொடுப்பதுதான் எனக்கு புரியவில்லை எனவும் ஆதங்கமாக குறிப்பிட்டிருக்கிறார். இந்திய அரசு சமரேஜ் ஜங்கிற்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் எனவும் இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *