Categories: Cricketlatest news

ஒரே போட்டோ.. சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக இந்திய நிர்வாகத்தை சீண்டிய முன்னாள் சி.எஸ்.கே. வீரர்!

இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் ஆடும் லெவனில் தேர்வு செய்யப்படவில்லை. இவருக்கு பதில் இஷான் கிஷன் அணியில் தேர்வு செய்யப்பட்டு, விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டார். இந்திய அணி நிர்வாகம் தன்மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார்.

விக்கெட் கீப்பராக மட்டுமின்றி இந்திய அணி வெற்றி இலக்கை அடையும் நோக்கில் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 46 பந்துகளில் 52 ரன்களை விளாசினார். முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது பற்றி இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுப்ரமனியம் பத்ரிநாத் இந்திய அணி நிர்வாகத்தை சாடியுள்ளார்.

Sanju-Samson

முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் ஜெர்சியை அணிந்து விளையாடிய சூரியகுமார் யாதவ் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு, இப்படி மட்டும் தான் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்று தெரிகிறது என பதிவிட்டுள்ளார். அவரது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது..,

“ஆடும் லெவனில் சஞ்சு இப்படி மட்டும் தான் இடம்பிடிப்பார் போன்று இருக்கிறது,” என்று தலைப்பிட்டு, சூரியகுமார் யாதவ் சஞ்சு சாம்சன் ஜெர்சி அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

S-Badrinath-Tweet

வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி தனது செட் பேட்டிங் ஆர்டருடன் களமிறங்கும் என்று தெரிகிறது. மூன்று போட்டிகள் கொண்ட உலக கோப்பை தொடரில் அதிரடியாக விளையாடும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம். அந்த வகையில், இந்திய அணிக்கு ரோகித் ஷர்மாவுடன் சுப்மன் கில் துவக்க வீரராக களமிறங்குவார்.

இவர்களை தொடர்ந்து விராட் கோலி களிறங்குவார். முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த இஷான் கிஷன் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

உலக கோப்பை போட்டி துவங்க இன்னும் 11 போட்டிகளே உள்ள நிலையில், இந்திய அணி உலக கோப்பையின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது. அந்த வகையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதிக பரிசோதனைகளை மேற்கொள்ளாது என்று கூறப்படுகிறது.

admin

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago