இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 20) டிரினிடாட்-இன் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற இருக்கிறது. இது இந்தியா மற்றும் வெஸ்ட் இன்டீஸ் அணிகள் மோதும் 100 ஆவது போட்டி ஆகும். மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இந்தியாவுக்காக களமிறங்கும் 500 ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆகும்.
விராட் கோலி இந்திய அணிக்காக இதுவரை 110 டெஸ்ட் போட்டிகள், 274 ஒருநாள் போட்டிகள் மற்றும் 115 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து, விராட் கோலி இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிக ரன்களை சேர்த்திருக்கிறார். விராட் கோலி தனது 500 ஆவது சர்வதேச போட்டியில் விளையாட இருப்பதை ஒட்டி, முன்னாள் இந்திய அணி வீரர் ஆகாஷ் சோப்ரா தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
“இந்த விளையாட்டுக்காக விராட் கோலியின் அர்ப்பணிப்பு வெளிப்படையாக தெரிவதோடு, அவர் யார் என்பதை விளக்குகிறது. தனது வாழ்க்கை முழுக்க கிரிக்கெட் மட்டும் தான் என்று துறவியை போன்று விராட் கோலி வாழ்ந்து வந்திருக்கிறார். இந்த காரணத்திற்காகவே, விராட் கோலி இந்த அற்புதமான விளையாட்டுக்கே விளம்பர தூதராக கருதப்படுகிறார். இந்திய கிரிக்கெட் மட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட்-க்கு அவர் செய்திருக்கும் அனைத்திற்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்,” என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்து இருக்கிறார்.
அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி ஆறாவது இடத்தில் உள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி சச்சின் டென்டுல்கருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். இன்றைய போட்டியில் விளையாடுவதன் மூலம், 500 சர்வதேச போட்டிகளில் விளையாடிய நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறுகிறார்.
தனது 500 ஆவது சர்வதேச போட்டியில் களமிறங்கும் விராட் கோலி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். கையில் டம்பெல்-உடன் ஸ்குவாட் செய்யும் காட்சிகள் அடங்கி வீடியோவுக்கு, எனது உடல் வலிமை மற்றும் மொபிலிட்டிக்காக நான் செய்யும் உடற்பயிற்சி என்று தலைப்பிட்டு இருந்தார். விராட் கோலியின் இந்த வீடியோ, அவர் பதிவிடும் மற்ற பதிவுகளை போன்றே அதிவேகமாக வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…