Cricket
ஒருநாள் போட்டிகளில் சஞ்சு சாம்சன்.. புது சந்தேகம் எழுப்பும் முன்னாள் வீரர்..!
ஒருநாள் போட்டிகளில் சஞ்சு சாம்சனின் பேட்டிங் குறித்து முன்னாள் இந்திய அணியின் துவக்க வீரர் வாசிம் ஜாஃபர் கேள்வி எழுப்பி இருக்கிறார். வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் ஒன்பது ரன்களில் தனது விக்கெட்-ஐ பறிக் கொடுத்தார்.
மூன்றாவது போட்டியில் தான் சந்தித்த முதல் நான்கு பந்துகளில் இரண்டு சிக்சர்களை பறக்க விட்டார். அந்த போட்டியில் 41 பந்துகளில் 51 ரன்களை குவித்து அசத்தினார். இதில் இரண்டு பவுன்டரிகளும், நான்கு சிக்சர்களும் அடங்கும். இவரது ஆட்டம் கூறித்து வாசிம் ஜாஃபர் கூறியதாவது..,
“அவர் உண்மையில் சிறப்பாக விளையாடினார், ஆனால் அவர் அதிக ரிஸ்க் கொண்ட போட்டியை விளையாடுகிறார். அவரது இன்னிங்ஸ்-ஐ பார்க்கும் போது, அவர் வெளியில் இறங்கி சில சிக்சர்களை பறக்கவிட்டார். அது சரியாக அமைந்ததால், சிக்சர்களாக மாறின, ஒருவேளை டைமிங் மாறி இருந்தால், அவை விக்கெட்களாக மாற வாய்ப்புகள் அதிகம். இது தான் சஞ்சு சாம்சன் இன்னிங்ஸ்-இல் அச்சமூட்டுகிறது. இது போன்ற நபர் நான்காவது இடத்தில் விளையாடுவது, எனக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.”
“அணி நிர்வாகம் அவருக்கு அந்த உரிமத்தை வழங்கி இருந்தால் சரி, ஆனால் அவரின் அதிரடி ஆட்டம் நிலையாக இருக்கிறதா என்பதும் பிரச்சனையை எழுப்புகிறது. அதிக அதிரடியாக விளையாட வேண்டும் என்று எண்ணும் போது, சில போட்டிகளில் அதிக ரன்களை குவிக்க தவறுகிறார்.
இது தான் எனக்கு பிரச்சனையாக இருக்கிறது. ஐ.பி.எல். தொடரில் பார்க்கும் போதும், சில போட்டிகளில் அவரது இன்னிங்ஸ் சிறப்பாக இருக்கிறது, சிலவற்றில் அவர் அதிக நேரம் களத்தில் நிற்காமல் விக்கெட்டை பறிக்கொடுத்திருக்கிறார். இதை அவர் கற்றுக் கொள்ள வேண்டும்,” என்று தெரிவித்தார்.
இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் இதுவரை 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் அவர் 390 ரன்களை குவித்து இருக்கிறார். இவரின் சராசரி 55.71 ஆகும். இந்த தொடர்களில் இவரது ஸ்டிரைக் ரேட் அதிக ரன்கள் 104, அவுட் ஆகாமல் 86 ஆகும். இவர் 17 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 300-க்கும் அதிக ரன்களை குவித்துள்ளார். சராசரி 20-க்கு அருகில் உள்ளது.