Cricket
தேவையில்லாத வேலை.. ஏன் இப்படி பண்ணனும்? இந்திய அணியை பொளந்த முன்னாள் வீரர்..!
வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மாற்றம் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. 115 எனும் சொற்ப இலக்கை துரத்திய போதே ஐந்து விக்கெட்களை இழந்து விட்டது. அணியில் இஷான் கிஷன், சுப்மன் கில், ஹர்திக் பான்டியா, சூரியகுமார் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்கூர் போன்ற வீரர்களும் இருந்தனர்.
கேப்டன் ரோகித் ஷர்மா களமிறங்குவதற்குள் இத்தனை விக்கெட்கள் சரிந்துவிட்டன. மேலும் விராட் கோலி ஆடவே இல்லை. முன்னள் இந்திய அணி வீரர் ஆகாஷ் சோப்ரா, முதல் ஒருநாள் போட்டியில் அணி மேற்கொண்ட சோதனை குறித்து குழப்பம் அடைந்துள்ளார். மேலும் துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் அரைசதம் அடித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது..,
“இந்திய அணியில் சஞ்சு சாம்சன் விளையாடுவாரா அல்லது இஷான் கிஷன் விளையாடுவாரா என்ற மிகப்பெரிய கேள்வி இருந்தது. இஷான் கிஷன் துவக்க வீரராக களமிறங்கி அரைசதம் அடித்ததில் எனக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை. இஷான் கிஷன் சிறப்பான வீரர் என்று எனக்கு ஏற்கனவே தெரியும்.”
“இஷான் கிஷன் நான்காவது வீரராக களமிங்குவதற்காக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் அணிக்கு மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வதற்கு ஏற்ற இரண்டாவது விக்கெட் கீப்பர் தேவை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனினும், அவரை துவக்க வீரராக களமிறங்க செய்கின்றீர்கள், அவரும் அரைசதம் அடிக்கிறார். அவர் அதைத் தான் செய்வார். அவர் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்திருக்கிறார்.”
“இதற்கு பின், சூரியகுமார் யாதவ் களமிறங்குகிறார், இது மற்றொரு கேள்விக்குறியாக இருக்கிறது. இது அவருக்கு சரியான வாய்ப்பு. எனது உலக கோப்பை அணியில் சூரியகுமார் யாதவ் இடம்பெற்று இருக்கிறார், அதற்கு அவர் அதிக ரன்களை அடிக்க வேண்டியது அவசியம் ஆகும். அவர் மூன்றாவது வீரராக களமிறங்கி, ரன்களை குவிக்க வேண்டும். அவர் சிறப்பாகவே ஆடினார்.”
“முதலில் ஸ்வீப் ஷாட் ஆடி நான்கு ரன்கள் கிடைத்தது. அதன் பிறகு மூன்று பந்துகளிலும் ஸ்வீப் ஷாட் ஆடுகிறார். மொத்தத்தில் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றி எல்.பி.டபிள்யூ. மூலம் அவுட் ஆகிறார். பேட்டிங்கில் வித்தியாசமே இல்லை,” என்று அவர் தெரிவித்தார்.
உலகின் தலைசிறந்த டி20 வீரர்களில் ஒருவர் சூரியகுமார் யாதவ். அடுத்தடுத்த போட்டிகளில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும்.