Cricket
ஏன்-லே.. இப்படி பண்றீங்க? அர்தீப் சிங் குறித்து மனம் குமுறிய முன்னாள் இந்திய வீரர்..!
2023 ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. 50 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் போதே, ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிக்கான பிரத்யேக இன்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்து இருக்கிறது.
சீனாவில் ஆங்சோவில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. ஆடவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 28-ம் தேதி துவங்கி அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக சி.எஸ்.கே. துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, அர்தீப் சிங் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி துவக்க வீரரான ஆகாஷ் சோப்ரா, தற்போதைய அணியில் அர்தீப் சிங் இடம்பெற்று இருப்பது குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய வேகப் பந்து வீச்சாளர் அர்தீப் சிங் இந்திய அணிக்காக 26 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகளில் களமிறங்கி இருக்கிறார்.
டெத் பவுலிங்கிற்கு பெயர்பெற்ற அர்தீப் சிங்-ஐ ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் சேர்க்காதது ஆச்சரியம் அளிப்பதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது, “அர்தீப் பெயர் இந்த அணியில் இருப்பது, எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அர்தீப் சிங்-ஐ ஒருநாள் போட்டிகளில் விளையாட வைக்க பரிசீலனை செய்ய மறுப்பது ஆச்சரியமாக உள்ளது. இவரை ஒரு நாள் போட்டிகளுக்கும் தேர்வு செய்யவில்லை, வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் தேர்வு செய்யவில்லை.”
“இவரை ஆசிய கோப்பைக்கான அணியிலும் பரிசீலனை செய்யாமல், உலக கோப்பைக்கான அணியில் இருந்தும் வெளியில் வைத்துள்ளீர்கள். என்ன நடந்துவிட்டது? நான் அர்தீப் சிங்கை பார்க்கும் போது, அவரிடம் பல நல்ல விஷயங்கள் உள்ளன. மூன்று வகையான போட்டிகளையும் விளையாட கூடிய திறமை அவரிடம் உள்ளது, ஆனால் அவரை அணியில் சேர்க்கவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.
விரைவில் வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அர்தீப் சிங் தேர்வு செய்யப்படவிவல்லை. ஆனால் இதே அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அர்தீப் சிங் இடம்பெற்றுள்ளார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் விவரம் :
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, பிரப்சிம்ரன் சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ரின்கு சிங், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய் ஆகியோர் ஆடும் லெவனிலும், சாய் கிஷோர், யஷ் தாக்கூர், தீபக் ஹூடா மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் 15 பேர் கொண்ட பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.