Connect with us

latest news

செந்தில் பாலாஜி வழக்கு… நீதிமன்றத்தின் முடிவு…முழு விவரம்….

Published

on

ED and Court

சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்பைடையில் கடந்த வருடம் ஜூன் மாதம் அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கடந்த ஓராண்டிற்கு மேலாக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார் இவர்.  இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதோடு வழக்கு சம்பந்தப்பட்ட வேறு கோரிக்கை மனுவையும் வழங்கியிருந்தார்.வழக்கை தாமதப்படுத்துவதற்காகவே செந்தில் பாலாஜி தரப்பு இப்படி செய்து வருகிறது என நீதிபதி முன்னர் அமாலாக்காத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார். இந்நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி விடுவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதோடு விசாரணைக்கு செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

Senthil balaji

Senthil balaji

இதன்படி இன்று செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜராக இருந்தது. இந்நிலையில் நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமத்தின் காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் செந்தில் பாலாஜியின் மீதான குற்றச்சாட்டுப்பதிவு இன்று இல்லை என சொல்லப்பட்டது.

உடல்நிலை குறைவு காரணமாக ஆஜராக முடியவில்லை எனவும், அதோடு விடுவிப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து மேல்முறையீடு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட உள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் சொல்லப்பட்டது. குற்றச்சாட்டு பதிவு குறித்த நடைமுறை இன்று கிடையாது என நீதிமன்றம் அறிவித்தது.

உடல் நிலை குறைவின் காரணமாக செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிட்சை வழங்கப்பட்டு வருகிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *