முன்னாள் முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது.
அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச் செயலாளராக உட்கட்சி தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் சசிகலா, பன்னீர் செல்வம் இருவரையும் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.
ஆனால் சசிகலா இந்த நீக்கத்தை சற்றும் பொருட்படுத்தாமல் அவ்வப்போது அறிக்கைகளை விட்டும், செய்தியாளர்களை சந்தித்தும் வருகிறார். அதிமுகவை ஒன்றினைக்க முயற்சிகள் நடப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினர் அனைவரும் ஒருங்கிணைந்தே இருப்பதாக சொல்லியிருந்தார். தமிழகம் சுற்றுப் பயணம் செய்வதை சசிகலா பழக்கமாகவே வைத்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது கறந்த பால் மடி சேராது, கருவாடு மீன் ஆகாது என கருத்து சொல்லியிருக்கிறார்.
கடந்த 2021ம் ஆண்டு தேர்தலின் போது சசிகலா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்ததை சுட்டிக்காட்டி பேசிய உதயகுமார் இப்போது திடிரென அரசியலில் குதிக்கிறேன் என சசிகலா சொல்லியிருக்கிறார். இந்த இரண்டில் எதை எடுத்துக் கொள்வதும் என்றார்.
இதே நிலை இதற்கு முன்னர் ஏற்பட்ட போது ஜானகி எடுத்த முடிவை சசிகலா இப்போது எடுத்தால் அதிமுகவில் இருக்கும் இரண்டு கோடி உறுப்பினர்களும் வரவேற்பார்கள். ஜானகியை முன் மாதிரியாக கொண்டு சசிகலா செயல்பட வேண்டும் என பழனிசாமி சொன்னதை உதயக்குமார் செய்தியாளர்கள் மத்தியல் நினைவுகூர்ந்து பேசினார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…