latest news
யாரும் வாக்கிங் போகாதீங்க…அறிவுரை சொன்ன மாஜி அமைச்சர்…
தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த போது அமைச்சராக இருந்தவர் செல்லூர் ராஜூ. இவர் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழ் நாட்டில் கொலை சம்பவங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். மதுரையில் நடைப் பயிற்சியில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டது குறித்து பேசினார்.
இப்போதெல்லாம் வாக்கிங் செல்வதற்கே பயமாக இருக்கிறது என்றார். தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகளுக்கு சரியான பாதுகாப்பு இல்லை என்றார். அப்போது தன் அருகே அதிமுக கட்சியினரை பார்த்து நீங்கல்லாம் வாக்கிங் போகாதீங்க எனச்சொன்னார். இதனால் அங்கே சிரிப்பலை எழுந்தது.
அதே போல மின் கட்டண உயர்வு குறித்தும் பதிலளித்தார். அதே நேரத்தில் அதிமுக ஒன்றுபடுமா? என கேட்கப்பட்ட கேள்விக்கு ‘வெயிட் அன்ட் சீ’ என பதிலளித்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரசியல் சாணக்கியர் என்றார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் முதல்வராக பதவியேற்ற போது அப்போதைய எதிர்கட்சித்தலைவரான ஸ்டாலின் இந்த ஆட்சி நிலைக்காது, விரைவில் கவிழும் என ஆருடம் சொன்னார். ஆனால் பழனிசாமி தனது ஆட்சி காலத்தை முழுமையாக்கி சாதித்து காட்டினார்.
கொரனா நேரத்தில் மக்களின் பாதுகாப்பு மற்றும் தேவைகளை உணர்ந்து சீராக செயல்பட்டதால் பிரதமர் மோடியிடமிருந்து பாராட்டு பெற்றவர் என சொல்லியிருந்தார்.
அதோடு சட்டமன்ற உறுப்பினராக தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்காக தான் சிறப்பாக பணியாற்றி வருவதாக சொல்லி இது வரை நடத்தி முடிக்கப்பட்ட பணிகளின் பட்டியலை வெளியிட்டார் செல்லூர் ராஜூ.