சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருப்பவர் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா. தனது அபார பந்துவீச்சின் மூலம் எதிரணியை திணறடிக்க செய்வதில் பும்ரா கைத்தேர்ந்தவர். கிரிக்கெட் அரங்கில் பல முன்னணி வீரர்கள், வல்லுநர்கள் அவ்வப்போது பும்ராவை புகழ்வது புதிதல்ல.
இந்த வரிசையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி இந்திய வீரர் பும்ராவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து பேசும் போது, சிமென்ட் பிட்ச்களில் கூட எதிரணி வீரர்களை மிரட்டும் அளவுக்கு பும்ரா சிறப்பானவர் என்று பசித் அலி தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா தொடர் நாயகன் விருது வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“சிமென்ட் பிட்ச்-இல் பும்ராவை பந்துவீச செய்தால் கூட, அவரது வித்தியாசமான உடல்மொழி பேட்டர்களை நிலைகுலைய செய்யும். இதுதான் நிதர்சனம். மற்ற பந்துவீச்சாளர்களால் இது முடியாது. அவர்களுக்கு இவ்வாறு செய்ய ஃபார்ம் மற்றும் ரிதம் அவசியம் தேவைப்படும்.”
“அவர் வருவார், விக்கெட் எடுப்பார், இதைத் தொடர்ந்து அடுத்த ஸ்பெல்-இல் மூன்று விக்கெட்டுகளை சாய்ப்பார். அவர் பேட்டர்களை எந்த விஷயத்திலும் கணிக்க முடியாத அளவுக்கு செயல்படுபவர்.”
“அவர் வீசும் ஸ்லோ பந்துகள் மிகவும் கச்சிதமாக இருக்கும். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் வீசும் வகையிலான பந்துகளை கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விக்கெட் வீழ்த்தும் திறமை கொண்டவர். அவர் மிகவும் ஸ்பெஷல்,” என்று யூடியூப் சேனலில் பேசிய பசித் அலி தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…