பொங்கி எழுமா பாகிஸ்தான்!…இஷ்டத்துக்கு ஆட்டி வைக்க போகுதா இங்கிலாந்து?…

சமீபத்தில் கத்துக் குட்டி அணியான பங்களாதேஷிடம் உதை வாங்கி இருந்தது டெஸ்ட் மேட்சில் பாகிஸ்தான் அணி. யாருமே எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரலாற்றில் நடக்கும் என. சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வியது அந்த அணி.

உலகில் பிற கிரிக்கெட் அ|ணிகளை தனது அபாரமான பந்து வீச்சால் கட்டுப்படுத்தி வைத்திருந்த பாகிஸ்தான் அண,  இப்போது உலகத் தரமிக்க வீரர்களை தேடி அலையும் நிலை உருவாகி விட்டதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பந்து வீச்சாளர்களைப் போலவே, பேட்ஸ்மேன்களும் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி எதிரணியை திணறடிக்கச் செய்த காலமும் இருந்து வந்தது. இம்ரான் கான், ஜாவீத் மியான்தத், சயீத் அன்வர், இஜாஸ் அகமது, இன்சமாம் உல் ஹக், சாஹீத் அஃபிரிடி, யூசுஃப் யுஹானா, யூனிஸ் கான் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் இந்த அணியில் விளையாடிய நேரத்தில் அவ்வளவு எளிதாக எதிரணி வென்று விட முடியாது என்ற நிலை இருந்து வந்தது. உலக சாம்பியன் பட்டத்தை ஐம்பது ஓவர் போட்டியிலும், இருபது ஓவர் போட்டியிலும் வென்றுள்ளது அந்த அணி.

சமீப நாட்களாகவே பாகிஸ்தான் அணி சரிவை மட்டுமே சந்தித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. பாபர் அசாம், முகம்மது ரிஸ்வான், ஷாகின் அஃபிரிடி போன்ற தரமிக்க வீரர்கள் அணியில் இடம் பிடித்திருந்த போதிலும், தொடர் வெற்றி என்பது அந்த அணிக்கு எட்டாக் கனியாக மாறி வருகிறது.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் வைத்து நடந்து முடிந்தது. முதல் இன்னிங்ஸில் ஐனூறு ரன்களை கடந்த போதிலும் மோசமான தோல்வியை சந்தித்த முதல் அணி என்ற சாதனையை படைத்திருந்தது பாகிஸ்தான் அணி.

Test Match

இந்த நிலையில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தான் மைதானத்தில் இன்று துவங்கியுள்ளது.

முதலில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. அறுபத்தி மூன்று ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் நூற்றி எழுபத்தி எட்டு ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது பாகிஸ்தான்.

அந்த அணியின் சயிம் ஆயூப் எழுபத்தி ஏழு ரன்களை எடுத்து அவுட் ஆனார், கம்ரான் குலாம் எழுபத்தி ஒன்பது ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் இரண்டு விக்கெட்டுகளையும், மேத்தியூ போட்ஸ், கார்சே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் எடுத்திருந்தனர்.

சொந்த மண்ணில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் பரிதாபமாக தோற்ற பாகிஸ்தான் அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எழுச்சி பெறுமா?, இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்து அந்த அணியை வெல்லுமா? அல்லது தனது பலத்தை முதல் போட்டியில் நிரூபித்த இங்கிலாந்து தன் இஷ்டத்திற்கு பாகிஸ்தானை பந்தாடுமா? என்பது போட்டியின் அடுத்தடுத்த நாட்களில் தெரிந்து விடும்.

sankar sundar

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago