இந்திய போஸ்ட் பெயரில் எஸ்எம்எஸ் எதுவும் வந்தால் அதை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அந்த தளத்தில் தங்களின் முகவரியை பதிவு செய்வது வழக்கம். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களது பொருட்களை வங்கி கணக்கில் இருந்து நேரடியாக அல்லது யுபிஐ, பேடிஎம், கூகுள் பே போன்றவற்றின் மூலமாக பணம் செலுத்துகிறார்கள்.
இந்த வாடிக்கையாளர்களை குறி வைத்து தற்போது ஒரு புது மோசடி நடைபெற்று வருகின்றது. அவர்கள் எந்த வகையில் வேண்டுமானாலும் வலை வீசலாம். வங்கிகள் அனுப்பும் otp போன்ற தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் இந்திய போஸ்ட் ஆபீஸ் பெயரில் குறிப்பிட்ட செல்போன்களுக்கும் இமெயில் முகவரிக்கும், மோசடி கும்பல் சில எஸ்எம்எஸ்களை அனுப்பி வருகின்றது.
இந்திய போஸ்ட் பெயரில் வரும் அந்த எஸ்எம்எஸ் தகவலில் உங்கள் பார்சல் குடோனுக்கு வந்துவிட்டது. டெலிவரி செய்வதற்கு முயற்சி செய்தும், ஆனால் முகவரி முழுமையாக இல்லாததால் டெலிவரி செய்ய முடியவில்லை. பார்சல் திரும்ப பெறப்படுவதை தவிர்க்க உங்கள் முகவரியை 48 மணி நேரத்திற்குள் அப்டேட் செய்யுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒரு லிங்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த லிங்கை கிளிக் செய்தால் இந்திய போஸ்ட் இணையதளம் என்று இணையம் ஓபன் ஆகின்றது. இந்த முகவரியை அப்டேட் செய்யும்படி கேட்கின்றது. எந்த பொருளும் ஆர்டர் செய்யாத நபர்களுக்கு இதுபோன்ற தகவல் வந்துள்ளது. இதை ஆராய்ச்சி செய்து பார்த்தபோது இது போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் இது போன்ற எஸ்எம்எஸ் வந்தால் அல்லது ஏதாவது ஒரு லிங்கை கிளிக் செய்யும்படி கூறினால் அதை செய்ய வேண்டாம். இது குறித்து உடனே காவல்துறைக்கு புகார் கொடுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…