Connect with us

latest news

புதுக்கோட்டையில் பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொலை… அதிர்ச்சி சம்பவம்…!

Published

on

போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடியை என்கவுண்டரில் போலீசார் சுட்டு கொலை செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்கம் பகுதியில் திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி துரைசாமி. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் போலீசார் இவரை கைது செய்திருக்கின்றார்கள். அப்போது துரைசாமி காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பும் முயன்ற போது என்கவுண்டர் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

வம்பன் காட்டு பகுதியில் தலைமறைவாக இருந்த ரவுடியை பிடிப்பதற்காக காவல்துறையினர் சென்று இருக்கிறார்கள். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது . ஏற்கனவே ஒருமுறை ரவுடி துறையை போலீசார் துப்பாக்கியில் சுட்டு பிடித்தனர். இந்த முறை துரைசாமி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது.

google news
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cricket

இதை செய்ய மும்பை அணிக்கு இருபத்தி ஏழு ஆண்டுகளா?…திருப்புமுனை தந்த தொடர்…

Published

on

Cricket

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரானி கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், ரெஸ்ட் ஆஃப் இந்திய அணியும் மோதியது. மும்பை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன சர்பாரஸ் கான் அதிரடியாக ஆடி இரட்டை சதமடித்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரஹானே தொன்னூற்றி ஏழு ரன்களை எடுத்திருந்தார். அதிரடியாக ஆடிய சர்பாரஸ் கான் இருனூற்றி இருபத்தி இரண்டு ரன்கள் ஆட்டமிழக்காமல் இருந்தார் முதல் இன்னிங்ஸில்.

ரெஸ்ட் ஆஃப் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். யாஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். தனது முதல் இன்னிங்ஸின் பேட்டிங்கை துவங்கிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி நானூற்றி பதினாறு ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அந்த அணியின் வீரர் அபிமன்யு ஈஸ்வர் அதிராடியாக ஆடி நூற்றி தொன்னூற்றி ஓரு ரன்களை குவித்தார். ஒன்பது ரன் களில் தனது இரட்டை சத வாய்ப்பினை தவற விட்டார். துரூவ் ஜுரேல் தொன்னூற்றி மூன்று ரன்களை எடுத்திருந்தார்.

Mumbai Team

Mumbai Team

மும்பை தரப்பில் ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியன் ஆகியோர் மூன்று விக்கெட்டுகளை எடுத்திருந்தனர். ஐந்தாவது மற்றும் கடைசி நாளில் மும்பை அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து முன்னூற்றி இருபத்தி ஒன்பது ரன்களை எடுத்தது.

போட்டி டிராவானது இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் அதிக ரன் களை எடுத்த மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இருபத்தி ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி இரானி கோப்பையை வென்றுள்ளது. இந்த இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமடித்த சர்பாரஸ் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

google news
Continue Reading

Cricket

வாகை சூடப்போகிறதா?…வாங்கிக் கட்டப்போகுதா?வங்கதேசம்…ஆறாம் தேதி துவங்க உள்ளது அதிரடி…

Published

on

Bangladesh Team

இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் கொண்ட போட்டி தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச ஆடவர் கிரிக்கெட் அணி. பாகிஸ்தானுடனான தொடரில் வெற்றி பெற்று, புத்துணர்வுடன் இந்தியாவிற்கு வந்தது அந்த அணி. ஆனால் டெஸ்ட் தொடரில் இந்தியர்களின் திறமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பரிதாபமாக தோற்று தொடரை இழந்தது.

முதல் டெஸ்ட் போட்டியின் ஆரம்ப நாளில் மட்டுமே சீறிப்பாய்ந்தது அந்த  அணி. அதன் பின்னர் ஓரு நாள் கூட இந்திய அணிக்கு இணையான ஆட்டத்தை அவர்களால் வெளிப்படுத்த முடியவில்லை. இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியடைந்தது அந்த அணி.

ஆஸ்திரேலியா,தென்-ஆப்பிரிக்கா,நியூசிலாந்து,இலங்கை அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் ஒப்பிட்டுப் பார்த்தால் கத்துக்குட்டி அணியாகவே பார்க்கப்படுகிறது இந்த அணி. ஆனால் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கதையே வேறுதான், இது சிறிது அபாயகரமான அணியாகவே பார்க்கப்படுகிறது.

இருபது ஓவர் போட்டிகளில் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் முக்கிய வீரர்கள் இந்தியாவிற்கு எதிரான இருபது ஓவர் போட்டி தொடரில் விளையாட உள்ளனர்.

Indian T20 Team

Indian T20 Team

இதற்கு முன்னர் நடந்த போட்டிகளில் பல நேரங்களில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதானல் டெஸ்ட் தொடரை விட இந்த இருபது ஓவர் போட்டி தொடர் விறுவிறுப்பானதாக இருக்கும் என்பதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் இருந்து விடாது. ஆனால் இந்திய அணி இப்போது இருபது ஓவர் போட்டிகளின் உலக சாம்பியன் என்பதாலும், சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதாலும் இம்முறை இது வங்கதேசத்திற்கு அதிகமான சவால்களை கொடுக்கும் என்பது ஒரு புறம் ஏற்புடைய ஒன்றாகவே இருக்கிறது.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் இருபது ஓவர் போட்டி ஆறாம் தேதி குவாலியரில் வைத்து நடைபெற உள்ளது. முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் டில்லி, ஹைதராபாத்தில் வைத்து நடைபெற உள்ளது.

google news
Continue Reading

latest news

பாஜக தமிழிசைக்கு சவால்…தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கியுள்ள நடிகர்…

Published

on

vijay

நடிகர் விஜய் தனது அறுபத்தி ஒன்பதாவது படத்தின்றகான அறிவிப்பை வெளியிட்டு , பட ஷூட்டிங்கிற்கான பூஜைகள் நேற்று சென்னையில் சிறப்பாக நடத்தப்பட்டது. இதுவே விஜயின் கடைசி திரைப்படமாக இருக்கும் என நடிகர் விஜய் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது. விஜயின் சமகால திரைப்பட போட்டியாளராக கருதப்படும் அஜீத்தை வைத்து “நேர் கொண்ட பார்வை”, “துணிவு” படங்களை இயக்கிய ஹெச்.வினோத், விஜயின் 69வது படத்தை இயக்க உள்ளார்.

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அன்மையில் துவங்கினார். கட்சி கொடி வெளியிடப்பட்டிருந்த நிலையில் முதல் அரசியல் மாநாட்டிற்கான வேலைகள தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது.

விஜய்யின் 69வது பட பூஜை நடைபெறுவதற்கு முன்னர் மாநாட்டிற்கான கால்கோள் விழா நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜய், தனது கட்சித் தொண்டர்களுக்கு அறிக்கையின் மூலம் அறிவுரை வழங்கியிருந்தார்.

Balaji tamilisai

Balaji tamilisai

நடிகர் விஜயுடன் படங்களில் நடித்திருந்தவர் நடிகர் ‘தாடி’பாலாஜி. இவர் இப்போது விஜயுடன் இணைந்து அரசியல் தனது தீவிர செயல்பாடுகளை மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நடந்த சிறப்பு பூஜையில் பங்கெடுத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்திருந்தார் நடிகர் ‘தாடி’ பாலாஜி. அப்போது தனது நண்பரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தரப்பிலிருந்து அழைப்பு வந்ததாகவும், மாநாட்டு வேலைகளை தீவிரமாக கவனித்து விஜய் சொல்லியதாக தன்னிடம் தெரிவிக்கப்படதாகவும் சொன்னார்.

விஜய் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சொல்லியிருந்த கருத்து குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்தார் நடிகர் ‘தாடி’பாலாஜி. மாநாடு முடியட்டும் அதன் பின்னர் தலைவர் விஜயை பற்றி தமிழிசையை பேசச் சொல்லுங்கள் என சவால் விடுத்துள்ளார், நடிகர் தாடி பாலாஜியை தொடர்ந்து தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் பலரும் விஜய் கட்சியில் மாநாட்டிற்கு முன்னதாக தங்களை இணைத்துக் கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

google news
Continue Reading

latest news

புரட்டாசி சனிக்கிழமை…பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்…

Published

on

தினசரி கோவில்களுக்கு செல்லும் பழக்கம் பலரிடம் இருந்து வந்தாலும், முக்கிய நாட்கள், பண்டிகை தினங்கள் அன்று இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவதும் அளித்து அன்றைய தினத்தில் சாமி தரிசெய்து தங்களது பிரார்த்தனைகளை வைத்தும், நேர்த்திக் கடகளை செலுத்தி வருபவர்களும் இருந்து வருகிறார்கள்.

தமிழ மாதங்களில் சில குறிப்பிட்ட சில தெய்வங்களை வணங்கும் மாதங்களாகவும் இருந்து வருகிறது. ஆடி மாதம் என்றால் அம்மன் கோவில்களில் அதிகமான பக்தர்கள் காணப்படுவார்கள். அம்மாதத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுபவைகளாக அமைந்து வருகிறது.

அதிலும் பெண்கள் அதிகமானோர் ஆடி மாதத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை வழிபாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவார்கள்.

Lord Perumal

Lord Perumal

நவராத்திரி விரதம் பெரும்பாலும் புரட்டாசி மாதத்திலேயே வரும். இந்த நாட்களில் பகதர்கள்  மாலை அணிவித்து விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை முன்வைக்கவும், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும் கோவில்களுக்கு சென்று வந்த வண்ணம் இருப்பர்.

அதே போல இந்த குறிப்பிட்ட புரட்டாசி மாதம் பெருமாளை வழிபட உகந்த மாதமாகவும் கருதப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் சனிக்கிழமை அதிக பிரசித்தி பெற்ற நாளாக இருக்கிறது பெருமாளை வழிபட நினைப்பவர்களுக்கு.

புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையான இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதே போல மார்கழி மாத்ததிலும் பெருமாளை வழிபடுவது அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையான இன்று தமிழகத்தில் அமைந்திருக்கும் முக்கிய பெருமாள் கோவில்களில் பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

google news
Continue Reading

latest news

இந்த நாலு மாவட்டத்துக்கு கன மழை…வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள எச்சரிக்கை…

Published

on

Rain

தமிழகத்தில் வட-கிழக்கு பருவ மழை விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் லேசானது வரையிலான மழை அவ்வப்போது பெய்து வருகிறது.

குமரிக் கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளைச் சார்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது.

RainFall

RainFall

இந்நிலையில் தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான மழை குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு மையம்.

அதன்படி தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று  மிகக் கனமழை பெய்யக்கூடும் எனவும், சில இடங்களில் கனமழை முதல் மிதமானது வரையிலான மற்றும் லேசானது வரையிலான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வு அறிக்கை சொல்லியிருக்கிறது.

இதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதே போல தமிழகத்தின் இதர மாவட்டங்களில் திண்டுக்கல், தேனி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

வெப்ப சலனத்தின் காரணமாக சென்னையின் சுற்று வட்டாரப்பகுதிகளில் இன்று லேசான மழை பெய்தது. இதனால சென்னையின் ஒரு சில இடங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

google news
Continue Reading

Trending