இந்திய கிரிக்கெட் அணியினர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள கடந்த வியாழன் கிழமை இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோர் தலைமையில் இந்திய அணி வீரர்கள் சென்னை வந்த மறுநாள் காலையே மைதானத்தில் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, சேப்பாக்கம் மைதானத்தில் தான் இந்திய வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, இந்திய வீரர்களை காண ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தந்தனர். அதில் இருவர், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை சந்தித்தனர்.
இது குறித்து இருவரில் ஒருத்தர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. விராட் கோலியை சந்தித்தது தொடர்பான அனுபவத்தை ரசிகர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக வைத்திருந்தார். அதில் விராட் கோலியுடன் ஏழு நிமிடங்கள் வரை உரையாட முடிந்தது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார். மேலும், அவர் விராட் கோலி “0 % Attitude” கொண்ட நபர் என்று குறிப்பிட்டு இருந்தார்.
ரசிகரின் பதிவு, சமீபத்தில் விராட் கோலி குறித்து சில முன்னாள் வீரர்கள் தெரிவித்த கருத்துகளுக்கு முற்றிலும் முரணாக இரந்தது. இதன் காரணமாக இந்த பதிவை விராட் கோலி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
டெஸ்ட் போட்டியை பொருத்தவரை இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்தவுள்ளார். இந்திய அணியில் ஆகாஷ் தீப் மற்றும் யாஷ் தயால் புதிதாக களமிறங்குகின்றனர். இதே போன்று ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி, காயத்தில் இருந்து மீண்ட பிறகு முதல் முறையாக இந்த தொடரின் மூலம் மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…