வான்கடே மைதானத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளே நுழைந்த உடன் ரசிகர்கள் பலரும் ஹர்திக் ஹர்திக் என்று கோஷமிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
2024- டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை கைப்பற்றியதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றார்கள்.
உலக கோப்பையுடன் இன்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் டெல்லி வந்தடைந்தனர். அவர்களுக்கு காலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். பின்னர் அனைத்து வீரர்களும் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்கள். அங்கு அவர்களுக்கு சிறப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணி வீரர்களை வரவேற்பதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் மும்பை வான்கடே மைதானத்தில் குவிந்துள்ளார்கள்.
கடும் மழையையும் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் வீரர்களை காண ரசிகர்கள் திரண்டு இருக்கிறார்கள். பின்னர் மழை சற்று குறைந்த உடன் கிரிக்கெட் வீரர்கள் என்ட்ரி கொடுத்ததும் ரசிகர்கள் அனைவரும் ஹர்திக் ஹர்திக் என்று முழுக்கமிட்டார்கள். கடந்த சில மாதத்திற்கு முன்பு மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.
அப்போது பலரும் அவரை கிண்டல் மற்றும் கேலி செய்தார்கள். இதெல்லாம் அவருக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது இந்திய அணிக்காக அவர் சிறப்பாக விளையாடியதால் அவரை உற்சாகப்படுத்துவதற்காக ஹர்திக் என்ற பெயரை கோஷமிட்டனர். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…