Connect with us

Cricket

இது மட்டும் போதுமே..நீக்கப்பட்ட வீரருக்காக குரல் கொடுத்துள்ள சாதனை பேட்ஸ்மேன்…

Published

on

Cricket

விளையாட்டு வீரர்களுக்கு எப்போதுமே அவர்களின் உடற்கட்டமைப்பின் மீது அதிக கவனம் இருந்து கொண்டே தான் இருக்கும். காரணம் உடல் எடையை பொறுத்துதான் அவர்களது ஃப்ட்னஸ் இருக்கும் என்பது பொதுவான கருத்தாக சொல்லப்படுவதாலும்.

அதனையும் தாண்டி குண்டான உடல் வாகை கொண்டவர்கள் எத்தனையோ பேர் விளையாட்டுப் போட்டிகளில் சாதனைகளை செய்து குவித்திருக்கிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹைக்கை இதற்கு மிகப்பெரிய முன் உதாரணமாக சொல்லலாம்.

இவர் பேட்டிங் கிரீஸிற்கு வந்து விட்டால் பவுலர்கள் பதறிப்போய் விடுவார்கள். நிதானமான ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கும் போதே திடிரென தனது அதிரடியை காட்டத் துவங்கி விடுவார் என்பதால். தனது உடல் எடையால் வேகமாக ஓட முடியாத நிலையில் பல முறை ரன்அவுட் ஆகியும் இருக்கிறார். அதன் மூலம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்திருக்கிறார் இவர்.

ப்ரித்வி ஷா இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தவர். ஐபிஎல் போட்டிகள் மட்டுமல்லாது, அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட சர்வதேச போட்டிகளிலும் கூட துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி அலற வைத்தும் வந்திருக்கிறார். ஆனால் இவரது மோசமான ஃபார்ம் பல முறை இவரது கேரியரை கவலைக்கிடமாக மாற்றியிருக்கிறது.

ரஞ்சி கோப்பை போட்டிகளில இவர் மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். பயிற்சியின் போது இவரது மெத்தனப்போக்கு உள்ளிட்ட கலவையான காரணங்கள் சொல்லப்பட்டது இவரது நீக்கத்திற்கு. ஆனால் இவரது உடல் எடையை காரணம் காட்டி தான் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இது குறித்து பேசியிருந்த சாதனை முன்னாள் பேட்ஸ்மேனும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் கவாஸ்கர்.

Prithvi Shah Sunil Gavaskar

Prithvi Shah Sunil Gavaskar

ரஞ்சி அணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதற்கு கலவையான காரணங்கள் செய்திகளாக காணப்படுகின்றன.

ஒருவேளை அது அணுகுமுறை, நன்னடத்தை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருந்தால் அது புரிந்து கொள்ளக் கூடியது என்றார். அதே நேரத்தில் அவருடைய எடை காரணமாக நீக்கப்பட்டிருக்க மாட்டார் என தான் நம்புவதாக சொன்னார்.

ஷாவின் உடலில் 35% சதவீதம் கொழுப்பு இருப்பதாலேயே அவர் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து கருத்து சொன்ன கவாஸ்கர், சமீபத்தில் நியூஸிலாந்திற்கு எதிராக 150 ரன்கள் அடித்த சர்பாரஸ் கானுடைய உடல் எடை மற்றும் அதன் வடிவம் குறித்து பொது வழியில் அதிகமாகப் பேசப்பட்டது.

ஆனால் அவர் சாதித்துக் காட்டியிருக்கிறார். ஒரு வீரர் 150+ ரன்கள் அடித்தாலோ அல்லது 20 ஓவர்களை வீசினாலே அதையே ஃபிட்னஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். அதே சமயம் பிரித்விஷா போன்ற உடலமைப்பை கொண்டுள்ள எத்தனை பேர் 379 ரன்களை அடித்துள்ளார்கள் என்பதையும் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 

 

 

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *