Cricket
இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாத்திடலாம்…ஆரம்பமான மகளிர் கிரிக்கெட் மோதல்..
நியூஸிலாந்து இந்த நாட்டின் பெயரைக் கேட்டால் இப்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் கோபம் தன்னாலேயே அதிகரிக்கக் கூடச் செய்யலாம். காரணம் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தேர்வாவதில் சிக்கலை அதிகரிக்கும் விதமாக தனது அபாரமான ஆட்டத்தால் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தியதுவே.
நடப்பு தொடரில் இந்திய ஆடவர் அணியை அசைத்துப் பார்த்து விட்டது நியூலாந்து அணி. இது ஒரு பக்கம் இருக்க அந்நாட்டை சேர்ந்த மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
மூன்று போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்து விட்டது. இரு அணிகளும் தலா ஒரு,ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது. ஆகையால் மூன்றாவது போட்டி மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இதில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்லும் என்பதால். முதல் இரண்டு போட்டிகளும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வைத்தே நடத்தப்பட்டன. கடைசி மற்றும் மூன்றாவது போட்டியும் இதே மைதானத்தில் தான் நடைபெற்று வருகிறது.
டாஸில் வெற்றி பெற்றுள்ள நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. ஓப்பனர்களாக நியூஸிலாந்து அணியின் ப்ளிம்மர், பேட்ஸ் ஆகியோர் ஆடி வருகின்றனர். 4 ஓவர்கள் நிறைவு அடைந்துள்ள நேரத்தில் நியூஸிலாந்து அணி 6 ரன்களை எடுத்துள்ளது.
ரேணுகா தாகூர் சிங், சைமா தாக்கூர் ஆகியோர் இரண்டு ஓவர்களை வீசியுள்ளனர். ஆடவர் அணியைப் போலவே இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தியாக வேண்டும் என்ற முனைப்பில் விளையாடி வருகிறது நியூஸிலாந்து.
இந்தியாவில் வைத்து நடைபெற்று வரும் இந்த தொடரை இழந்து விடக்கூடாது என்ற வேகத்திலும், எப்படியாவது வெற்றி பெற்று பெருமை சேர்த்தும் கிரிக்கெட் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு விளையாடி வருகின்றனர் இந்திய பெண்கள்.