மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை எழாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பாராளுமன்றத்தில் இன்று பொருளாதார அறிக்கையை நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார். பட்ஜெட்டுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை நாட்டின் பொருளாதார நிலை குறித்த விரிவான தகவல்களை வழங்குகிறது. மத்திய அரசின் கொள்கை முன்னுரிமைகளின் பிரதிபலிப்பாகவும் இந்த அறிக்கை விளங்கும்.
நிர்மலா சீதாராமன் கொடுத்துள்ள பொருளாதார அறிக்கையில் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுபவை, இந்தியாவின் பொருளாதாரம் ஆறு புள்ளி ஐந்து சதவீதம் (6.5%) முதல் ஏழு சதவீதம்(7%) வரை வளர்ச்சி காணும் என சொல்லப்பட்டிருக்கிறது. இதே போல நாட்டில் வேலை வாய்ப்புகளும் பெருகி வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்படுகின்றதாகவும் அறிக்கை சொல்லியிருக்கிறது.
நாட்டின் பணவீக்கமும் கட்டுக்குள் உள்ளது என்றும், மோசமான கால நிலையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. நாட்டின் பணவீக்கம் நாலு புள்ளி ஐந்து சதவீதமாக குறைய வாய்ப்பு உள்ளது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரனா தொற்றுக்கு பிறகு இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது என சொல்லியிருக்கிறது நிர்மலா சீதாராமன் கொடுத்துள்ள அறிக்கை.
அதே போல 2020ம் நிதி ஆண்டை விட 2024ம் நிதி ஆண்டில் உண்மையான ஜி.டி.பி. 20 சதவீதம் (20%) உயர்ந்துள்ளது. இந்திய நாட்டின் 2025 ஆண்டு நிதியின் வளர்ச்சி வலுவானதாக இருக்கும் என பட்ஜெட்டிற்கு முந்தைய பொருளாதார அறிக்கையில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மோடி தலைமையிலான அரசின் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பல்வேறு சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…