Connect with us

latest news

கடன கட்ட போறீங்களா, இல்லையா…? மிரட்டல் விடுத்த நிதிநிறுவனம்… தாயும் மகனும் செய்த செயல்…!

Published

on

தனியார் பைனான்ஸ் நிறுவன மேலாளர் கடனை திருப்பி செலுத்த கோரி மிரட்டிய காரணத்தினால் தாயும் மகனும் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

வேலூர் மாவட்டம், ஏரிகுத்தி மேடு என்ற பகுதியைச் சேர்ந்த அன்சார் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். இவரின் மனைவி மும்தாஜ். இந்த தம்பதிகளுக்கு நஸ்ரின் சபிஹார் என இரண்டு மகள்களும், இம்ரான் என்ற மகனும் இருக்கின்றார். இந்த மூவருக்குமே திருமணம் ஆகிவிட்டது. இம்ரான் அதே பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு திருமணமாகி 2 1/2 வருடங்கள் ஆகும் நிலையில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

தற்போது அவரின் மனைவி ஹர்ஷியாமா 5 மாதம் கர்ப்பமாக இருக்கின்றார். அன்சார் அவரது மனைவி மும்தாஜ் ஆகிய இருவரும் பேரணாம்பட்டு, குடியாத்தம், ஆம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இயங்கி வரும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் மற்றும் மகளிர் குழுக்களில் என்று 28 லட்சமும், தனியார் நிதி நிறுவனத்தில் 2,20,000 கடனாக வாங்கி வைத்திருக்கிறார்கள். இந்த கடனை அடைப்பதற்காக உள்ளூர் பைனான்ஸ்களில் கடன் வாங்கி செலுத்தி வந்திருக்கிறார்கள்.

அதிக அளவு கடந்தால் மிகுந்த அவதிப்பட்டு வந்திருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று மும்தாஜ் இம்ரான் இருவரும் திடீரென்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டனர். இது தொடர்பாக பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் அன்சரின் வீட்டிற்கு சென்று கடனை திரும்ப செலுத்த கோரி மிரட்டி இருக்கின்றார். இதனால் பயந்து போன அவர் வெளியில் சென்று விட்டார். இம்ரானின் மனைவி கர்ப்பமாக இருப்பதால் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்று விட்டார். இந்நிலையில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர் கடனை திரும்ப செலுத்தக் கோரி கதவை தட்டியபோது அவமானம் அடைந்த மும்தாஜ் மற்றும் மகன் இம்ரான் இருவரும் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு இம்ரான் மற்றும் அவரின் தாயார் மும்தாஜ் கதறி அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். அதில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்பா அன்சர் எல்லா இடங்களிலும் எங்களை காட்டி கடன் வாங்கி வைத்திருக்கின்றார். கடனை கட்ட முடியாமலும் கடனை திருப்பி கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாமலும் தவித்து வருகிறோம் என்று வீடியோ பதிவிட்டு அதனை உறவினர்கள் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *