latest news
மகளிர் உரிமைத் தொகை… கண்டிஷன்களில் No Change… இருந்தும் குவியும் விண்ணப்பங்கள்…!
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தளர்வுகள் ஏற்படுத்தாவிட்டாலும் மக்கள் நம்பிக்கையுடன் விண்ணப்பித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை என்ற திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின் இதனை வெளியிட்டார். 2023 பிப்ரவரி 25ஆம் தேதி அவர் இந்த திட்டம் தொடங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 7000 கோடி நிதி செய்யப்பட்டு செப்டம்பர் முதல் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த திட்டம் தொடங்கி 10 மாதங்களான நிலையில் மாதம் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இது திட்டத்தின் மூலமாக ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயன்பெற்று வருகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் ஜூலை 15 முதல் மேலும் 1.48 லட்சம் பேருக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பலருக்கும் உரிமை தொகையை கிடைக்காமல் அதிருப்தியில் இருந்தனர். இதனால் அரசு அறிவித்த பொருளாதார பகுதியில் தொடர்புகள் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை இழந்தது. கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது விண்ணப்பித்த அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
ஆனால் மக்களவைத் தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் புதிதாக விண்ணப்பிக்கப்பட்டவர்களுக்கு உரிமை தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் விக்கிரவாண்டி பிரச்சாரத்திற்கு வராமலேயே இருந்து விட்டார். தொடர்ந்து நிபந்தனைகளில் தளர்வு அளிக்கப்படாவிட்டாலும், நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஒருமுறை விண்ணப்பித்து பார்க்கலாம் என தொடர்ந்து முயற்சி எடுத்து மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.