பிரான்ச் தலைநகர் பாரிஸில் இன்று ஒலிம்பிக் போட்டிகள் கோலாலமாக தொடங்க இருக்கிறது. 206 நாடுகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொள்ளும் ஒலிம்பிக் போட்டியின் முதல் நாளே பெரிய அசம்பாவிதம் ஒன்று நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பாரிஸ் ஒலிம்பிக் இந்திய நேரப்படி இன்று 11 மணிக்கு தொடங்க உள்ளது. 10,714 வீரர்களும் 600 படகுகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர். இந்நிலையில் பிரான்சின் பிரதான எக்ஸ்பிரஸ் ரயில் வழித்தடத்தில் சில விஷமிகளால் தீ மூட்டப்பட்டுள்ளது. இதனால் மொத்த பிரான்சின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் இந்த தீ விபத்து காரணமாக பாரிஸ் முதல் லில்லி இடையே இருக்கும் அதிவேக ரயில் போக்குவரத்து தடம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிளாசிக் பாதை வழியாக எல்லாரையும் திருப்பி விடப்பட்டுள்ள நிலையில் பயண நேரம் மேலும் ஒன்றரை மணி நேரம் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், எக்ஸ்பிரஸ் வழித்தடம் திங்கள் 29ஆம் தேதி முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது. இந்த பாரிசலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…