latest news
தூங்க வந்த முதியவர்…தூக்க நினைத்த வெள்ளம்…துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறை…
ஒரு பக்கம் நாளைய தேவைகளை பூர்த்தி செய்ய இன்றைய தேடலோடு அலைந்தும், அயராது உழைக்கும் மனித வாழ்க்கை இருந்து வர, ஓரே முறை தான் வாழ்வு அதனை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற மன நிலையோடு பொழுதை இன்பமாகக் கழித்து வரும் இன்னொரு சாரார், இருப்பது போதும் இறுதி வரை என்ற மன நிறைவோடு வாழ்ந்து வரும் மனிதர்கள் இன்னொரு பக்கம் என இந்த உலகம் எல்லோருக்குமான வசந்த வாசல் கதவைத் திறந்து வைத்து காத்திருக்கிறது.
நாளை என்பது வருமா?, வராதா? என்பதை அறியாது இருப்போம் என்ற நம்பிக்கை மட்டுமே நம்முடையது என அன்றாட வாழ்வை வாழ்வதுமாக மனித வாழ்வு இருந்து வருகிறது உலகம் முழுவதும். விதியின் வசத்தால் வீழ்ச்சியை சந்தித்தவர்களும் உண்டு, அதே விதியால் வாழ்வு புரட்டிப் போடப்பட்ட நிகழ்வுகளும் நடந்திருக்கிறது.
நாளையை தினத்தை எதிர்கொள்ள இன்று உறக்கம் அவசியம் என தூங்கிக்கொண்டிருந்த பலர் இயற்கையின் கோரப்பிடியில் சிக்கி வயநாட்டில் பலியாகியிருக்கிறார்கள்.
விதி முடிக்க நினைத்தால் விட்டு வைக்காது என்பதை தெளிவாக காட்டி விடும் இது போன்ற இயற்கை சீற்றங்கள். ஆனால் அதிர்ஷ்டம் இருந்தால் முள் கிரீடம் கூட மலர் மகுடமாக மாற்ற தான் செய்யும், அதனையும் விதியே தீர்மாணிக்கும்.
திருச்சி கொள்ளிடம் ஆற்றின் மேம்பால தூணருகே சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்ற எண்ணத்தில் படுத்து தூங்க சென்றிருக்கிறார் முதியவர் ஒருவர். அவர் எதிர்பாராதவிதமாக தண்ணீரின் திடீர் வருகையால் கொல்லிடம் ஆறு வெள்ளத்தால் சூழ்ப்பட்டது.
என்ன செய்வது என்று அறியாமல் பயத்தோடே நின்று கொண்டிருந்த முதியவருக்கு கடவுள் கண்களில் காட்சியளிப்பது போல அந்த இடத்திற்கு விரைந்து வந்து முதியவரை காக்கும் முயற்சியை துவங்கினர் திருச்சி ஸ்ரீரங்கம் தீயணைப்பு படை வீரர்கள். ஆற்று பாலத்தின் இடையே சிக்கிக் கொண்டு விழி பிதுங்கிய நிலையில் இருந்த முதியவரை கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டு அவரை மரணத்திலிருந்து காப்பாற்றினர் மீட்புப் படையினர். திருச்சியில் முதியவர் கயிறு கட்டி காப்பாற்றப்படும் வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.