தமிழகத்தில் பானிபூரி கடைகளில் பச்சை நிற நிறமிகளை கலப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அனைத்து கடைகளிலும் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார் .
பானி பூரி என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக பானி பூரி இருந்து வருகின்றது. இப்படி அனைவரும் ருசியது சாப்பிடும் பானிபூரி கடைகளில் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது பொதுமக்கள் இடையே மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது “கர்நாடகாவில் பானி பூரி சோதனை செய்யப்பட்டு அதில் புற்றுநோய்க்கான காரணிகள் இருப்பது உறுதியாக இருக்கின்றது. இதனால் தமிழகத்திலும் பானி பூரி கடைகளில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் ஆயிரக்கணக்கான கடைகள் உள்ளன. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தனித்தனியாக உத்தரவிட்டுள்ளேன்.
அவர்கள் அனைவரும் மாதிரிகளை சேகரித்து சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வைத்திருக்கும் பானி பூரி பாதுகாப்பற்றது என தெரிய வந்தால் உடனே கடைகளை மூட உத்தரவிடப்படும் . அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் வட மாநில இளைஞர்கள் பெரும்பாலானோர் பானி பூரி விற்பனை செய்கிறார்கள். அவர்கள் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் .
மேலும் முதல் நாளில் தயாரிக்கப்படும் பாணியை ஒருநாள் மட்டுமே வைத்திருக்க வேண்டும். இதனை வட மாநில இளைஞர்கள் பலரும் பின்பற்றுவது கிடையாது. இந்த பானி பச்சை கலரில் இருக்கும். அதற்காக நிறத்தை ஏற்படுத்தும் நிறமிகளை பயன்படுத்துவதாக கூறப்படுகின்றது. இதெல்லாம் ஆய்வு முடிவில் தெரிய வந்தால் அந்த கடைகள் மூடி சீல் வைக்கப்படும்” என உத்தரவிட்டுள்ளார்
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…