Connect with us

latest news

182 கிலோ பிளாஸ்டிக் பைகள்… 6 ஆயிரம் ரூபாய் அபராதம்… வளச்சு வளச்சு புடிச்ச உணவு பாதுகாப்புத்துறை…!

Published

on

திருவள்ளூரில் உணவில் நிறம் கலந்த 19 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அபராதம் விதித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கலெக்டர் சங்கர் அறிவுரையின் பெயரில் உணவு பாதுகாப்பு துறை ஊழியர்கள் திருவள்ளூர் பஸ் நிலையம், பஜார் வீதி கடைகள், பேக்கரிகள், ஸ்வீட் ஸ்டால், ஹோட்டல் என அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்தார்கள். அப்போது உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்த ஐந்து கடைகளுக்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

மேலும் மூன்று இனிப்பகத்தில் தயாரித்து வைத்திருந்த இனிப்பு பொருட்களில் அதிக அளவு வண்ணம் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த மூன்று கடைகளில் இருந்து 10 கிலோ இனிப்பு மற்றும் கார வகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பிரியாணி கடைகளில் சிக்கனில் அதிகப்படியான வண்ணம் சேர்த்து இருந்ததால் 6 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து அந்த கடைகளுக்கு 6000 ரூபாய் அபராதமும் விதித்திருந்தார்கள்.

 

மேலும் 11 கடைகளில் இருந்து 182 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைகளுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டு கடைகளில் உணவுப் பொருட்களில் காலாவதியான சிப்ஸ், பிஸ்கட், முறுக்கு உள்ளிட்ட பொருட்கள் அதைத்தொடர்ந்து ஐந்து லிட்டர் எண்ணையும் பறிமுதல் செய்து அந்த கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

google news