govt update news
பெண்களே..! இலவசமா தையல் மிஷின் கொடுக்கிறார்களா.. உங்களுக்கும் வேணுமா..? எப்படி வாங்குவது…!
அரசு தரப்பில் வழங்கப்படும் இலவச தையல் மிஷினை எப்படி வாங்குவது எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
பெண்கள் சுயமாக வீட்டில் இருந்து சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அரசு தரப்பில் இலவச தையில் இயந்திரம் வழங்கப்பட்டு வருகின்றது. இலவச தையல் இயந்திர திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை அரசு தற்போது தொடங்கி இருக்கின்றது. இந்த திட்டம் பொருளாதார ரீதியாக மிக நலிவடைந்த மற்றும் வீட்டில் இருந்தபடியே தையல் மிஷினை வைத்து வேலை செய்ய விரும்பும் பெண்களுக்காக இந்த திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றது.
அரசின் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் அதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது தான் இதில் நாம் பார்க்க போகிறோம். இலவச தையில் எந்திரம் மூலமாக ஏழை மற்றும் நலிவடைந்து பிரிவினருக்கும், இல்லத்தரசிகளுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டுதலாக இருக்கின்றது. பெண்களை சுய சார்பு உடையவர்களாக மாற்றுவது, வீட்டில் இருந்து கொண்டே வேலை செய்து பணம் சம்பாதிப்பது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகின்றது.
மேலும் பெண்கள் தங்கள் வீட்டிலேயே தையல் பணியை தொடங்கும் வகையில் பயிற்சியும் வழங்கப்படுகின்றது. ஏழை மற்றும் நலிவடைந்து பிரிவை சேர்ந்த நீங்கள் தையல் இயந்திர திட்டத்தில் பயன்பெற விரும்பினால் இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் குறிப்பாக தையல் வேலையில் ஆர்வம் இருக்கும். ஆனால் நிதி காரணங்களால் தையல் மெஷின் வாங்க முடியாத பெண்களுக்கு உதவுவதற்காக இந்த திட்டம் செயல்பட்டு வருகின்றது.
இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 15,000 வழங்கப்படுகின்றது. இதன் மூலம் அவர்கள் நல்ல தரமான இயந்திரத்தை வாங்க முடியும். மேலும் 5 நாட்கள் பயிற்சியும் தினமும் 500 ரூபாய் நிதி உதவியும் இதில் வழங்கப்படுகின்றது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு அறிக்கை, பாஸ்போர்ட் புகைப்படம், முகவரி ஆதாரம், ஜாதி சான்றிதழ்.
இந்த திட்டத்தில் பலன்களைப் பெற விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்களுக்கு மட்டுமே இதில் முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்தின் பலன்களை பெற குடும்பத்தில் உள்ள எவரும் அரசு அல்லது அரசியல் பதவிகளை வகிக்க கூடாது. விண்ணப்பதாரர் இதற்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டும்.
இலவசையில் இயந்திர திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட்டு அந்த விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த தையல் இயந்திர திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கான விண்ணப்பங்களை அக்டோபர் 31ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். நீங்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் இந்த தேதிக்குள் விண்ணப்பியங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.