இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான கௌதம் கம்பீரால் பயிற்சியாளராக நான்கு ஆண்டுகள் கூட தாக்குப் பிடிக்க முடியாது என முன்னாள் உலகக்கோப்பை அணியின் பிரபலம் சொல்லியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
பொதுவாகவே கம்பீர் தன் மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டார். யார் அவருக்கு எவ்வளவு புகழ் இருக்கிறது? என எதையும் யோசிக்காமல் தோன்றிய விஷயத்தை ஓபன் ஆக மீடியாக்களில் நிறைய முறை பேசி ரசிகர்களிடம் விமர்சிக்கப்பட்டிருக்கிறார். அவர் முதலில் பயிற்சியாளராக அறிவிக்கப்பட இருக்கிறார் என்றதும் இந்திய ரசிகர்கள் துணுக்குற்றனர்.
இதற்கு காரணம் கௌதம் கம்பீர் கறாரான ஆள் மட்டுமல்ல கொஞ்சம் திமிர் பிடித்தவர் தான். தனக்கு பிடிக்காதவர்களை அப்படியே ஒதுக்கி விடுவார். அதுபோல அவர் நினைப்பதுதான் நடக்க வேண்டும் எனவும் பிடிவாதம் பிடிப்பார். இதனால் இந்திய அணியின் அனுபவ வீரர்களுக்குள் பிரச்சினை ஏற்படும் எனவும் இந்திய ரசிகர்கள் நினைத்தனர்.
இந்நிலையில் தோனியின் தலைமையில் விளையாடிய உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்திருந்தார் ஜோகிந்தர் சர்மா கம்பீரின் எண்ட்ரி குறித்து பேசி இருக்கிறார். அவர் கூறுகையில், கம்பீர் இந்திய அணியின் வெற்றிக்கு தன்னுடைய 100 சதவீத உழைப்பை கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் அவரால் இந்திய அணியில் நான்கு வருடங்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது. பொதுவாக அவருக்கு எதையும் அளவில் வைத்து பேசும் பழக்கம் கிடையாது. அவர் ஒரு முடிவை எடுத்து அதை செயல்படுத்த நினைப்பார். இது பல வீரர்களுக்கு இடையே பிரச்சினையை உருவாக்கும். விராட் கோலி பற்றி கூறவில்லை. பெரும்பாலும் எல்லா வீரர்களுக்கும் கம்பீர் சொல்வது எதிராகத்தான் இருக்கும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
சமீபத்தில் ஜோகிந்தர் ஷர்மா மற்றும் மகேந்திர சிங் தோனி இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலானது. கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஜோதிடர் ஷர்மா தற்போது காவல்துறையில் உயரிய பதவியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…