Connect with us

Cricket

இந்திய அணியை கேகேஆர் ஆக மாற்றிய கம்பீர்… தொக்கா ஒரு இடத்தை ஸ்ரேயாஸ் ஐயருக்கு கொடுத்துட்டாரே…

Published

on

இந்திய அணியின் முதன்மை பயர்ச்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்று கொண்டதிலிருந்து பல சர்ச்சைகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் அவர் மெண்டார் செய்த கே கே ஆர் அணியின் முக்கிய வீரரான ஸ்ரேயாஸ் ஐயரை இந்திய அணிக்குள் பக்காவாக அமர்த்தி விட்டாராம்.

இந்திய அணி உலக கோப்பை வெற்றிக்கு பின்னர் முதன்மை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் ஓய்வு எடுத்துக்கொண்டார். அவரின் இடத்திற்கு அதிரடி ஆட்டக்காரரான கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். பொதுவாகவே கம்பீரின் பேச்சு பல இடங்களில் விமர்சனத்துக்கு ஆளாகும். ரசிகர்களின் போக்கு ஒரு பக்கம் என்றால் கம்பீரின் நடைமுறை வேறு மாதிரி இருக்கும்.

அந்த வகையில் கம்பீர் பொறுப்பேற்று கொண்ட பின் இந்தியா அணி முதல் தொடரில் இலங்கையை எதிர்கொண்டு விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்கிற கணக்கில் இந்தியா அணி கைப்பற்றியது. இந்நிலையில் இன்று ஒரு நாள் தொடரின் முதல் போட்டி தொடங்க இருக்கிறது.

அதில் அனுபவ வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்க இருக்கின்றனர். மேலும் தற்போது இந்திய அணியில் நிறைய பேட்ஸ்மேன்கள் இருப்பதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயரை வேகப்பந்து வீச பயிலுமாறு கம்பீர் அறிவுரை கொடுத்திருக்கிறாராம்.

தற்போது இந்திய அணிக்குள் நிறைய வீரர்கள் திறமையாக விளையாடுவதால், ஆல்ரவுண்டர்களுக்கே அதிக வாய்ப்பு இருக்கும். நாளை பிளேயிங் அவனில் எடுக்கும் போது பேட்டிங்களுடன் பந்து வீச தெரிவது மேலும் வாய்ப்பை பிரகாசமாக்கும் என்பதே இந்த அறிவுரைக்கான பின்னணியாக காணப்படுகிறது.

இது குறித்து தகவல் கசிந்துள்ள நிலையில் கௌதம் கம்பீர் சரியான பயிற்சியாளராக இருந்தாலும், இந்திய அணியை தேர்வு செய்யும் போது தனக்கு வேண்டியவர்களை மட்டும் வைத்துக் கொண்டு திறமையான வீரர்களை தவிர்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் இழந்துள்ளன. முக்கியமாக தோனி வழிநடத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கொடுக்கப்படாமல் இருப்பதும் இந்த சந்தேகத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *