பாகிஸ்தான் அணியில் மாற்றங்களுக்கு முடிவில்லா நிலையே தொடர்கிறது. 2011 ஆம் ஆண்டு எம்.எஸ். டோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை வென்ற போது இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் கேரி கிர்ஸ்டென்.
சமீபத்தில் இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற பிறகு அணியில் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறின. பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளர் பொறுப்பேற்றதும், பாபர் அசாம் மீண்டும் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அதன்பிறகு தேர்வுக்குழுவில் மாற்றங்களை கொண்டுவந்தார். இவற்றை மேற்கொள்ளவே நான்கு மாதங்கள் கழிந்துவிட்டன. இதனிடையே கிர்ஸ்டென் மற்றும் அணி வீரர்கள் இடையில் கடந்த சில வாரங்களாக பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேரடியாக கிர்ஸ்டெனிடம் பதவி விலக கோரவில்லை. ஆனாலும், பாகிஸ்தான் அணியின் செயல்பாட்டு பயிற்சியாளராக டேவிட் ரெய்ட்-ஐ நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கவில்லை என்று தெரிகிறது.
மேலும் டேவிட்-க்கு பதிலாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேறு சில பெயர்களை பரிந்துரைத்ததாக தெரிகிறது. இது கிர்ஸ்டெனுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
எனினும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிர்ஸ்டெனுக்கு மாற்றாக வேறொரு நபரை பயிற்சியாளராக அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…