Categories: Cricketlatest news

இந்திய கிரிக்கெட்டின் பாட்ஷா யார்? கவுதம் கம்பீர் சொன்ன பெயர், அதிர்ந்த அரங்கம்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சில மாதங்களுக்கு முன்பு தான் பொறுப்பேற்றார். இவர் தலைமையில் இந்திய அணி நீண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.

இதில் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19 ஆம் தேதி துவங்க உள்ளது. இதனிடையே இந்திய கிரிக்கெட் அணிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்த அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடரில் உரையாடினார்.

அப்போது, இந்திய கிரிக்கெட்டில் யார்யாருக்கு எந்த பட்டம் அளிப்பீர்கள் என்ற வகையில் அவரிடம் கேளவி கேட்கப்பட்டது. அதற்கு அவர் வீரர்களின் பெயரை மட்டுமே கூற வேண்டும். அப்படி அவர் தெரிவித்த பதில்களை தொடர்ந்து பார்ப்போம்.

பாட்ஷா – யுவராஜ் சிங்
கோபமுற்ற இளைஞர் – நான் தான்
தபாங் – சச்சின் டெண்டுல்கர்
ஷாஹென்ஷா – விராட் கோலி
கில்லாடி – ஜஸ்பிரித் பும்ரா. மற்றொரு விஷயம் கில்லாடி தான் இவற்றில் மிகமுக்கியமான ஒன்று.
மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் – ராகுல் டிராவிட்
கப்பர் – ஷிகர் தவான்
டைகர் – சவுரவ் கங்குலி

இதே கேள்விகள் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவானிடமும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்கள்,

பாட்ஷா – விராட் கோலி
கோபமுற்ற இளைஞர் – முகமது சிராஜ்
தபாங் – ஹர்திக் பாண்டியா
ஷாஹென்ஷா – ஜஸ்பிரித் பும்ரா
கில்லாடி – சுப்மன் கில்
மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் – சச்சின் டெண்டுல்கர்
கப்பர் – சூர்யகுமார் யாதவ்
டைகர் – சவுரவ் கங்குலி

கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர் ஜாண்டி ரோட்ஸ், “கவுதம் கம்பீர் எங்கு சென்றாலும், அவர் தாக்க்ததை ஏற்படுத்துவார். இதை லக்னோ அணியில் இருந்து வெளியேறி கொல்கத்தா அணியில் இணைந்த போது நாம் பார்த்திருக்கிறோம். அவருக்கு என்ன வேண்டும் என்று அவருக்கு நன்றாக தெரியும். மேலும் அவர் தன் மனதில் இருப்பதை அப்படியே பேசக்கூடியவர்.”

“கம்பீரால் முடியாதது எதுவுமே இல்லை, அவர் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆகி இருக்கிறார். அவர்கள் ஏற்கனவே இருப்பதை விட மேலும் பலம்வாய்ந்த அணியாக நிச்சயம் மாறுவார்கள்,” என்று தெரிவித்து இருந்தார்.

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago