இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இணைந்து இருக்கும் நிலையில் முதல் தொடர் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இதை தொடர்ந்து கவுதம் கம்பீர் இந்திய அணியின் பிரபல போட்டியாளர் விராட் கோலிக்கும் தனக்குமான உறவு குறித்து மனம் திறந்துள்ளார்.
முன்பே இருவருக்குள்ளும் பிரச்னை இருந்தது. ஆனால் இருவரும் கேமராவுக்கு முன்னர் ஐபிஎல்லில் தான் மோதிக்கொண்டனர். இது பெரிய பிரச்னையாக உருவானது. தற்போது இருவரும் ஒரு நாட்டிற்காக ஒரே அணியில் வேறு இணைந்துள்ளனர். இதன் முதற்கட்டமாக ஸ்ரீலங்க தொடர் வரும் 27ந் தேதியில் இருந்து தொடங்குகிறது.
இதுகுறித்து பேசிய கவுதம் கம்பீர், விராட் கோலிக்கும் எனக்குமான பிரச்னை எங்களுடையது. அது டிஆர்பிக்காக இல்லை. நாங்கள் நிறைய பேசிவிட்டோம். இங்கு இருக்கும் அனைவரும் நாட்டிற்காக போராடுவார்கள். மேலும், மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்று விட்டதால் பும்ராவின் வேலை இன்னும் அதிகரித்துள்ளது.
ரோகித் மற்றும் கோலி இரண்டு பார்மெட்களை மட்டுமே விளையாட இருப்பதால் அவர்கள் எல்லா போட்டிகளிலும் விளையாட வேண்டும் என விரும்புகிறேன். மேலும் அவர்கள் உடற்தகுதி சரியாக இருந்தால் 2027ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையிலும் விளையாடுவார்கள். சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20ல் மட்டுமே விளையாடுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…