நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது நாட்டை அடக்கி வாசிக்க வேண்டும் என்று கீதா ஜீவன் என்று கூறி இருக்கின்றார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சருமான கீதா ஜீவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் முத்தமிழ் கலைஞர் கருணாநிதி குறித்து சீமானின் பேச்சு கண்டிக்கத்தக்கது. தலைவருக்கு கலைஞர் குறித்து மக்கள் நன்கு அறிவார்கள். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று கொடுத்தவர், முதல் தலைமுறை பட்டதாரி திட்டம், கல்வி கடன் ரத்து, நுழைவுத் தேர்வு ரத்து, கணினி வழி வளர்ச்சி என பல திட்டங்களை செயல்படுத்தி இருக்கின்றார்.
அவரை இழிவாக பேசுவதை திமுக அரசு கடுமையாக கண்டிக்கின்றது. திமுக தொண்டர்களை பொறுத்தவரையில் தலைவரின் கண் அசைவுக்காக தான் காத்திருக்கின்றோம். பொறுமையாக இருக்கிறார்கள். ஆளுங்கட்சியில் இருக்கின்றோம் என்பதற்காக பொறுமையாக இருக்கின்றோம். சீமான் கட்சியை சேர்ந்த துரைமுருகன் ஜாதி பெயரை சொல்லி இழிவாக பேசுகிறார் என்று அருண் என்பவர் புகார் அளித்ததன் அடிப்படையில் தான் அரசு நடவடிக்கை எடுத்தது.
தனிப்பட்ட முறையில் தவறான சொற்களை பயன்படுத்தி சீமான் பேசுவது சட்ட ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் வகையில் இருக்கின்றது. இது ஏற்புடையதல்ல. நடைமுறைக்கு சாத்தியமில்லாத அடுக்குமொழியில் பேசி தமிழ் சமூகத்தை தவறாக வழிநடத்த முயற்சி செய்கின்றார். சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும் .
அரசியல் அரவேக்காடு தனமாக பேசக்கூடாது. அரசியல் முதிர்ச்சி இல்லாத தலைவராக தெரிகிறார் சீமான். பச்சோந்தி போல் ஒரு நாள் ஒரு கருத்தையும் மற்றொரு நாள் வேறொரு கருத்தையும் பேசுகின்றார். சீமான் அரசியல் தலைவருக்கான தகுதியானவர் அல்ல. எங்கள் தலைவருக்கு குறித்து பேசுவதற்கு அவருக்கு எந்த அருகதையும் கிடையாது” என்று கூறியிருக்கின்றார் கீதா ஜீவன்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…