ராட்சச அளவிலான விண்கல் ஒன்று வருகிற 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி பூமியை தாக்கும் என கூறப்படுகின்றது.
விண்கல் பூமியை தாக்கும் அபாயம் குறித்து ஆராய்ச்சி இடங்கள் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்ந்து வருவதாகவும் இன்னும் 16 வருடங்களில் சரியாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி அந்த விண்கல் பூமியை தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தனர்.
இதிலிருந்து தற்காத்துக் கொள்ள போதுமான பாதுகாப்பு இன்னும் நாம் ஏற்படுத்தவில்லை என்று கூறுகிறது. இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கின்றார் அதில் அவர் கூறியிருந்ததாவது அபோபிஸ் என் ராட்சச அளவிலான விண்கல் ஒன்று வரும் 2029 ஏப்ரல் 13ஆம் தேதி பூமியை கடக்கும் என கண்காணிக்கப்படுகின்றது.
இந்த விண்கல் மீண்டும் 2036 ஆம் ஆண்டு பூமியை தாக்கலாம். 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமியை தாக்கும்போது மனித குலத்துக்கு அதிகம் ஆபத்து ஏற்படும். வரலாற்றில் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவு நடந்துள்ளது. எனவே இது ஏற்படாது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. பூமிக்கு எதுவும் ஆகக்கூடாது என்று தான் நாமும் விரும்புகிறோம். ஆனால் நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது. அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. அதை எதிர் கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…