Gold
தங்கத்தின் விலை எந்த தளத்தில் வெளியானாலும் அதில் அதிக ஆர்வம் காட்டி, ஒரு முறையாவது அதை படிக்காமலேயோ அல்லது அதைப் பற்றிய செய்தியை பார்க்காமல் கடந்து செல்பவர்களின் எண்ணிக்கை கம்மி என்று கூட சொல்லலாம். அந்த அளவு தங்கம் மீது இந்தியர்களுக்கு மோகம் இருந்து வருகிறது.
சென்னையில் விற்கப்பட்டு வரும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் ஏழாயிரத்து முன்னூற்று அறுபது ரூபாயாக்கும் (ரூ.7,360/-) , ஒரு சவரனின் விலை ஐம்பத்தி எட்டாயிரத்து என்னூற்றி என்பது ரூபாயாக்கும் (ரூ.58,880/-) விற்கப்பட்டு வருகிறது.
இந்த அக்டோபர் மாதம் துவங்கியதிலிருந்தே தங்கத்தின் விலை அதிக முறை ஏறுமுகத்தினையே சந்தித்துள்ளது என்பது புள்ளி விவரங்கள் சொல்லும் உண்மை. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில நாட்களில் அறுபதாயிரம் ரூபாயை (ரூ.60,000/-) எட்டி விடுமோ? என்ற பயம் நகைப் பிரியர்களின் மனதில் அதிகரிக்கது துவங்கியுள்ளது.
Gold and Silver
இப்படி இருக்கையில் கடந்த வருடமான 2023ன் இதே அக்டோபர் மாதத்தில் இருபத்தி இரண்டு கேரட் தங்கத்தின் பத்து (10கிராம்) விலை எவ்வளவாக இருந்திருக்கிறது என்பதைப் பற்றிய தகவல்.
ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளியிடப்பட்டிருந்த செய்தியின் படி. அக்டோபர் மாதம் எட்டாம் தேதி 2023ம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை மூவாயிரத்து எழனூறு ரூபாயாக (ரூ.53,700/-) இருந்திருக்கிறது. ஒரு சவரன் என கணக்கீட்டு பார்த்தால் தங்கத்தின் அன்றைய விலை நாற்பத்தி இரண்டாயிரத்து தொல்லாயிரத்து அறுபது ரூபாயாக (ரூ.42,960/-)ம் இருந்திருக்கிறது.
இந்த இரண்டு விலைகளில் ஒப்பீட்டைப் பார்த்தல் சரியாக ஒரு வருடத்தில் ஒரு சவரனின் விலையில் பதினைந்தாயிரத்து தொல்லாயிரத்து இருபது ரூபாய் (ரூ.15,920/-) உயர்ந்திருக்கிறது.
இதே நாளில் வெல்ளியின் விலை 1கிராம் எழுபத்தி ரூபாய்க்கு (ரூ.75/-) விற்கப்பட்டு வந்திருக்கிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாயாக (ரூ.75,000/-) இருந்திருக்கிறது. வெள்ளியின் நேற்றைய கிராம் ஒன்று நூற்றி ஏழு ரூபாயாக (ரூ.107/-) உள்ளது, ஓரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்தி ஏழாயிரம் ரூபாயாக (ரூ.1,07,000/-) உள்ளது. வெள்ளியின் விலையை கடந்த ஒரு வருட ஒப்பீடை வைத்து பார்தால் முப்பத்தி இரண்டாயிரம் ரூபாய் (ரூ.32,000/-) அதிகரித்திருக்கிறது.
ஃபேஸ்புக்கின் மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் நிறுவனம், Restyle என்ற புதிய அப்டேட்டைக் கொண்டுவர இருக்கிறது. இதுல என்னலாம் பண்ணலாம்? Instagram’s…
OpenAI நிறுவனத்தின் ஏஐ வீடியோ எடிட்டிங் செயலியான Sora விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. OpenAI Sora ChatGPT…
பயனாளர்களின் செல்ஃபிக்களை வைத்து அதை மீம் டெம்ப்ளேட்டாக மாற்றும் புதிய வசதியை கூகுள் போட்டோஸ் விரைவில் அப்டேட் செய்ய இருப்பதாகத்…
Meta: மெட்டா நிறுவனம் anti-scam வசதிகளையும், விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம் whatsapp, messenger மற்றும்…
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகமானபோதே, deep fake என்றொரு பிரச்சனையும் அதோடு கூடவே சேர்ந்து வளர்ந்தது. Deep…
பிரவுசர் உலகில் முடிசூடா மன்னனாக இருக்கும் கூகுளின் குரோமுக்குப் போட்டியாக சாட்ஜிபிடி Atlas என்கிற ஏஐ தொழில்நுட்பத்தோடு இயங்கக் கூடிய…