Finance
தரிகிட தோம் போடும் தங்கத்தின் விலை…இப்படி ஆகிப்போச்சே இன்னைக்கு!..
.தங்கத்தின் விலை அடிக்கடி மாற்றத்தை காட்டி வரும் ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. சர்வதேச பொருளாதார சூழலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தான் தங்கத்தின் விற்பனை விலையை முடிவு செய்து வருபவையாகவே இருந்து வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் சடங்கு சம்பர்தாயங்கள் செய்முறைகள் அதிகம் என்பதால் தங்கத்தின் மீதான தாக்கம் இருந்தே தான் வருகிறது.
சுப சடங்குகளில் முன் வரிசையில் நிறுத்தப்படும் பிரதான ஆபரணமாக தங்கம் இருந்து வருவதால் அதன் மீதான தேவைகளும் அதிகரித்து வருகிறது நாள்தோறும். அதோடு மட்டும் இல்லாமல் வித விதமான ஆபரணமாக தங்கம் வடிவமைக்கப்படுவதால் நகைப் பிரியர்களுக்கு இதன் மீதான மோகத்தை அதிகரித்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு தங்க இறக்கும் மதி மீதான சுங்கவரி குறைக்கப்பட்டது. பட்ஜெட் தாக்கல் தினத்தன்று ஒரே நாளில் இரண்டு முறை விலை குறைந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதே நிலை அடுத்த மூன்று நாட்களும் நீடித்தது. தொடர்ந்து இறங்கு முகத்திலே இருந்து வந்த தங்கம் நேற்று சிறிய உயர்வினை விற்பனை விலையில் சந்தித்தது. ஆனால் இன்று மீண்டும் இறங்கு முகத்தை எட்டியுள்ளது.
இன்று இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் ஒரு கிராம் தங்கம் ஆராயிரத்து நானூற்றி முப்பத்தி ஐந்து ரூபாய்க்கு (6435/-)விற்கப்படுகிறது. இதனால் ஒரு சவரனின் விலை ஐம்பத்தி ஓராயிரத்து நானூற்றி என்பது ரூபாயாக (ரூ.51,480/-) இருக்கிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு என்பத்தி ஒன்பது ரூபாயாக இருக்கிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை என்பத்தி ஒன்பதாயிரம் (ரூ.89,000/-) ரூபாய்க்கு விற்கப்படுகிறது._