தமிழ் மாதாமான ஆடி மாதத்தின் துவக்கத்தில் தங்கம் விலை தாறு மாறாக எகிறியது. இந்த விலை உயர்வு ஆபரணப்பிரியர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. தங்கத்தின் மீது முதலீடு செய்யப்பட்டு அதன் மூலம் பெரிய வணிகமும் உலக அளவில் நடந்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் தான் தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அன்றாடம் கூர்ந்து கவனிக்கப்படும். வணிக ரீதியாக மட்டுமே தங்கம் முக்கியத்துவம் பெறாமல் அணிகலன்களாக்கி அணிவதில் முன்னுரிமை வழங்கப்படுவதாலுமே.
இந்தியா போன்ற நாடுகளில் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, விலையில் ஏற்படும் நிலை இல்லாத தன்மைக்கு காரணமாக மாறி விடுகிறது. சர்வதேச பொருளாதரத்தின் நிலையும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தான் விலை நிர்ணயத்திற்கான முக்கிய காரணியாக மாறி விடுகிறது சந்தையில் தினசரி.
நேற்றும் தங்கத்தின் விலை இறங்குமுகத்திலேயே இருந்தது. சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் தங்கத்தின் விலை நேற்றை விட இன்று தடாலடியாக குறைந்து இன்பத்தை வழங்கியுள்ளது நகை பிரியர்களுக்கு. ஒரு கிராம் தங்கத்தின் நேற்றைய விலையை விட இன்று நாற்பது ரூபாய் (ரூ.40/-) குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரனில் விலை முன்னூற்றி இருபது ரூபாய் (ரூ.320/-)குறைந்துள்ளது.
ஒரு கிராம் தங்கம் இன்று ஆராயிரத்து முன்னூற்றி என்பத்தி ஐந்து ரூபாயாக (ரூ.6385/-) உள்ளது. ஒரு சவரன் ஐம்பத்தி நாலாயிரத்து அறனூற்றி என்பது ரூபாய்க்கு(ரூ.54.680/-) விற்கப்படுகிறது.
இதே போல வெள்ளியின் விலையும் இன்று இறங்கு முகத்திலேயே இருக்கிறது நேற்றை விட ஒரு கிராமிற்கு ஒரு ரூபாய் எழுபத்தி ஐந்து காசுகள் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை தொன்னூற்றி ஆறு (ரூ.96/-)ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை தொன்னூற்றி ஆராயிரம் ரூபாயாக (ரூ.96,000/-)உள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…